Tuesday, December 9, 2014

ஜெமோ - மனுஷ்யபுத்திரன் சண்டைதான் காவியத்தலைவனா?

முகநூலில் நான் படித்து ரசித்தது உங்களின் பார்வைக்காக.
இதுதான் நிஜமோ  என்று யோசிக்க வைக்கிறது இப்பதிவு



காவியத் தலைவன் – இலக்கிய உலகினரின் பார்வை
காவியத் தலைவன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் 'எந்த நிஜ நபர்களின் தழுவழும் இல்லை' என்று படத்தின் முதல் காட்சியிலேயே அறிவித்தாலும், கதை என்னவோ சுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் இவர்களை மையப்படுத்தியும் அவர்களிடையே பல்வேறு கால காட்டங்களில் நடந்த பல்வேறு உணர்ச்சிகரமான சுவையான சம்பவங்களை மையப்படுத்தியே உருவாக்கப் பட்டது என்று இலக்கிய உலகத்தினர் பலமாக நம்புகிறார்கள்.

இதில் சுந்தர ராமசாமியின் பாத்திரத்தை நாசர் ஏற்றிருக்கிறார்.
ஜெயமோகன் பாத்திரத்தை பிரிதிவிராஜ் ஏற்றிருக்கிறார்.
மனுஷ்யபுத்திரன் பாத்திரத்தை சித்தார்த் ஏற்றிருக்கிறார்..
பிரிதிவிராஜூக்கு வேதாநாயகம்' பிள்ளை' என்று பெயர் வைத்திருப்தாலும், மலையால த்வனியுடன் பேசும் நடிகரை நடிக்க வைத்திருப்பதாலும், படம் முழுவதும் பிரிதிவிராஜ் நான் பெரிய நடிகன், நான் பெரிய நடிகன் என்று தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதாலும், மிகவும் ஒழுக்க சீலராக காட்டியிருப்பதாலும் அந்த கதாபாத்திரம்தான் ஜெயமோகனை பிரதிபலிப்பது என்று இலக்கிய உலகத்தினர் திடமாக நம்புகிறார்கள்.

பெண் பித்து உள்ளவராக கட்டியிருக்கிற ஒரே காரணத்தினாலேயே( படத்திலேயே பல இடங்களில் பொம்பள பொறுக்கி என்று ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனைத் திட்டுகிறார்) அது மனுஷ்யபுத்திரனை குறிப்பிடும் கதாபாத்திரம் என்று இலக்கிய உலகினர் நம்புகிறார்கள்..
கதைப்படி, நாசர் ஒரு நாடக கம்பெனி வைத்திருக்கிறார்.. அவரை குருவாக ஜெயமோகன் சாரி.. பிரிதிவிராஜ் ஏற்றுக் கொண்டு அங்கு நாடகம் பயில்கிறார்.. ரயிலில் பாடிக்கொண்டே பிச்சை எடுத்து வருபவராக (மனுஷ்).. சித்தார்த் வருகிறார்.. சுந்தர ராமசாமி அவரையும் தன் சிஷ்யர்களில் ஒருவராக சேர்த்துக் கொள்கிறார்..

சித்தார்த்தின் வளர்ச்சி பிரிதிவிராஜிற்குப் பிடிக்கவில்லை.. அதுவும் நாசர் சித்தார்த்தை பல சமயங்களில் பிரிதிவிராஜைக் காட்டிலும் சிறந்தவன் என்று பாராட்டுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் ராஜாபாட் அந்தஸ்தை நாசர் பிரிதிவிராஜிற்கு கொடுக்காமல் சித்தார்த்திற்கு கொடுக்கிறார்..( காலச்சுவடு.. சப் எடிட்டர் போஸ்ட் ).அதனால் சித்தார்த்த் மீது பிரிதிவிராஜ் கொலை வெறி கொண்டு கதையின் இறுதியில் அவரை கொலை செய்கிறார்.. இதுதான் காவியத் தலைவன் படத்தின் கதை.

இந்தக் கதையின் ஒவ்வொரு கட்டமும், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருப்பதாக இலக்கிய உலகினர் வாதிடுகிறார்கள்..

கதையின் ஒரு கட்டத்தில் பிரதிவிராஜ், ‘‘அவன் ஒரு பிச்சைக்காரன் , அவனை சிறந்த நடிகராக தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறீங்களே’’ என்று கேட்கும் இடமும் நிஜ வாழ்வில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை ‘ நொண்டி அவன்’ என்று சொன்ன இடமும் மிகவும் ஒருமை கொண்டது என்று அவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்..
நாசர் இறந்த பின்பு பிரிதிவிராஜ் தனி நாடக குழு உண்டாக்கிக் கொள்கிறார்.. சித்தார்த் தனி நாடக குழு உண்டாக்கிக் கொள்கிறார்.. இது முறையே சொல் புதிது, உயிர்மை பத்திரிகைகள் துவங்கப் பட்டதை குறிப்பிடுவன என அவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

தனி தனி குழு அமைத்துக் கொண்டாலும் பிரிதிவிராஜ் புராண நாடகங்களே போடுவதும், சித்தார்த் விடுதலைப் போராட்ட நாடகங்கள் போடுவதும் , ஜெயமோகன் இந்துத்துவா, மஹாபாரத செயல்பாடு கொண்டிருப்பதையும் மனுஷ்யபுத்திரன் மதசார்பின்மை, பெண் உரிமை, கலாச்சார காவலர்களுக்கு எதிராக பேசுவது போன்றவற்றை குறிப்பிடுவதாகவும் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
கதையின் ஒரு கட்டத்தில் பிரிதிவிராஜூன் நாடக கம்பெனி நஷ்டமடையும். சித்தார்த் அவர் மீது எப்போதும் சொந்த அண்ணன் போல் பாசம் கொண்டவர். அதனால் அவரை தன் கம்பெனிக்கு அழைத்து வருவார்..இந்த நிகழ்வானது ஜெயமோகன் சொல்புதிதில் இருந்து வெளி வந்து கொஞ்ச காலம் உயிர்மையுடன் சேர்ந்து செயல்பட்டதை குறிப்பிடுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

கிளைமாக்ஸில் பிரிதிவிராஜ் சித்தார்த்தை துப்பாக்கியால் சுடுவார்.. இது மனுஷ்யபுத்திரனை நோக்கிய ஜெயமோகனின் சமீபத்திய எண்ணப்போக்கை காட்டுவதாக அபிப்பிராயப் படுகிறார்கள்.
படத்தின் இறுதிக்காட்சியில் பிரிதிவிராஜ் வாரணாசிக்கு சென்று காசியில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வார்.. வாரணாசி .. காசி இவையெல்லாம் ஜெயமோகனின் உள்ளக்கிடைக்கையை தத்ரூபமாக காட்டுவதாகவும் அபிப்பிராயப் படுகிறார்கள்.

வாரணாசி நரேந்திரமோடியின் தொகுதியாகவும் இருக்கிற காரணத்தினால்.. நமோ இருக்கும் இடமே ஜெமோ போய் சேருமிடம் என்கிறவிதமான ஒரு அரசியல் வாசிப்பும் அதன் பின்னணியில் இருப்பதாக அர்த்தப் படுத்துகிறார்கள் 

சுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் ஆகிய மூவரின் வாழ்க்கைக்கும் காவியத்தலைவன் திரைப்படத்திற்கும் இவ்வளவு ஒற்றுமையை கண்டுபிடித்த அவர்களால், கதையில் ஜமீன் மகளாக வந்து சித்தார்த்தின் மீது காதல் கொண்டு, சித்தார்த் காலச்சுவடில் இருந்து வெளியேற காரணமாக இருந்த அந்தப் பெண் இவர்களின் நிஜ வாழ்க்கையில் யார் என்பதும் , வடிவு என்ற பெயருடன் நாடகத்தில் உடன் நடிக்கும் பெண்ணாக வந்து சித்தார்த்தின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் யார் என்பது போன்ற விசயங்களை மட்டும் இன்னும் விளக்க முடியவில்லை..
இதைப் பற்றிய கூடுதல் தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தால் இலக்கிய உலகினருக்கு அது மிகவும் உறுதுணையாக இருக்கும்.

No comments:

Post a Comment