Sunday, December 7, 2014

சைவமாய் மாறிய மட்டன் மூளைக் கறி



அசைவக் குறிப்பிலிருந்து ஒரு சைவ உணவு

அவள் கிச்சன் என்று ஒரு இதழ் வருவதே கடந்த மாதம்தான் தெரியும். ஏதோ ஒரு வெளி நாட்டு உணவுப் பண்டத்தின் வண்ணப் படம் அட்டையில் கண்ணைக் கவர அப்புத்தகத்தை வாங்கினேன். அதிலே மட்டன் மூளையைக் கொண்டு தயாரிக்கும் ஒரு உணவை நான் காலி ஃப்ளவர் பயன்படுத்து சைவ உணவாக மாற்றிய அனுபவம்தான் இன்று. கொஞ்சம் என்னுடைய கைவண்ணத்தையும் இணைத்து தயாரித்தேன்.

சோம்பு என்று அழைக்கப்படுகிற பெருஞ்சீரகம், மிளகு, சீரகம் ஆகியவை ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து தனித்தனியாக மிக்ஸியில் பொடி செய்து தனியாகவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூளும் மிள்காய் தூளும் கூட ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொஞ்சமாக தேங்காய் துறுவலையும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருள், அதுதாங்க காலிப்ளவர் அதையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி சுடுதண்ணீரில் ஒரு பத்து நிமிஷம் ஊற வைத்துக் கொள்ளவும்.

 அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அந்த சோம்புப் பொடியைப் போட்டு கூடவே கருவேப்பிலையையும் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம், அதன் பின்பு தக்காளி போட்டு வதக்கவும். இவை ந்ன்றாக வந்தங்கிய பின்பு மிளகு, சீரக, மஞ்சள், மிளகாய் பொடிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கவும். இந்த கட்டத்தில் ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.

தண்ணீர் வற்றி வரும் வேளையில் காலிப்ளவரை சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக கிளறி கடைசியில் தேங்காய் பொடியையும் நன்றாக தூவி கிளறி எடுத்தால் 


ஓ! நான்தான் பெயர் வைக்க வேண்டும் அல்லவா?

“கோபி மசாலா ட்ரை தயார்.

இதை பொறியலாகவும் சாப்பிடலாம், சப்பாத்திக்கான இணை உணவாகவும் (சைட் டிஷ் என்பதை நான் தமிழ்ப்படுத்தியுள்ளேன்) சாப்பிடலாம்.

பின் குறிப்பு : எனது கவிதைகளைப் படித்த ஒரு தோழர் கவிதைத் தொகுப்பு வெளியிடலாம் என்று ஆலோசனை சொன்னார்.

இன்னும் பல சிறுகதைகள் எழுதி ஒரு சிறுகதை தொகுப்பு வெளியிட வேண்டும் என்று ஒரு மூத்த தோழர் வாழ்த்து சொன்னார்.

சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு இவற்றுக்கெல்லாம் முன்பாக தமுஎகச மாநிலத் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வழியில் அனேகமாக ஒரு சமையல் புத்தகம்தான் வெளியிடுவேன் என்று நினைக்கிறேன்.

6 comments:

  1. படத்தை பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கும்னு தெரிகிறது.நல்ல சத்துணவு. பிரெட்டுக்கு இணை உணவாக சாப்பிடவும் நல்லாயிருக்கும்.
    சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்புகளோடு சமையல் புத்தகமும் வெளியிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. முதல் வெளிளீடே
    சமையல் புத்தகமா
    வெளியிடுங்கள் நண்பரே
    அந்நூல் மனக்கட்டும், சுவைக்கட்டும்

    ReplyDelete
  3. ‘இணை உணவு’. மிகச் சரியான மொழியாக்கம்.

    ReplyDelete