Thursday, December 4, 2014

ஏமாற்றப்படுவது தெரியாமலேயே புகழ்கிறார்கள் - இந்தியர்கள்

மோடி அரசு  பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துக் கொண்டே வருகிறது என்று புகழ்ந்து வரும் பல அப்பாவி இந்தியர்களுக்கு  உண்மையில் மத்தியரசு தங்களை ஏமாற்றி வருகிறது என்ற உண்மை தெரியவே இல்லை. 

தீக்கதிர் நாளிதழில் இன்று வெளி வந்துள்ள தலையங்கம் மோடி அரசின் மோசடியை அம்பலப்படுத்துகிறது.

 


 பெட்ரோல், டீசலில் அரசின் மோசடி வேலை

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய் வதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தொடர்ந்து நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்திருக்கிறது என ஒருபுறம் சொல்லிக்கொண்டே மறுபுறம் நயவஞ்சகமாக மக்களின் பணத்தை களவாடுவதில் ஈடுபட்டு வருகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கு பாதியாக குறைந்திருக்கிறது. 

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 120 டாலர் என்ற அளவில் இருந்து படிப்படியாக குறைந்து ஒரு பேரல் 68 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரைசுமார் 40 சதவிகிதத்திற்கும் மேல் கச்சா எண் ணெய் விலை சரிவடைந்திருக்கிறது. அப்படியென்றால் இந்தியாவில் விற்கப்படும் பெட் ரோல் மற்றும் டீசலின் விலை ஏற்கனவே இருந்தவிலையை விட 40 சதவிகிதம் குறைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் குறைக்கப்பட வில்லை. கடந்த மூன்று மாதங்களில் 7 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் மொத்தத்தில் 10 சதவிகிதம் கூட குறைக்கப்படவில்லை. ரூ .72 வரை சென்ற பெட்ரோல் விலை, தற்போது ரூ. 66 என்ற அளவிலேயே இருக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? பொது மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை அப்படியே மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் களவாடியிருக்கிறது. 

காங்கிரஸ் ஆட்சியாளர்களும், பாஜக ஆட்சியாளர்களும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது என ஒப்பாரி வைத்து அதனை ஈடுகட்டவே விலை உயர்வு என அறிவித்தன. அப்போதும் தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றினர். அதாவது அவர்கள் எதிர்பார்த்த லாபத்தின் இலக்கை அடையமுடியவில்லை என்பதையே நஷ்டம் என பொய்யான கணக்கு காட்டினர். அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்களில் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பலஆயிரம் கோடி லாபம் ஈட்டியது தெரிய வந்தது. ஆனாலும் பாஜகவும், காங்கிரசும் இணைந்து, சர்வதேச எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே 15 தினங்களுக்கு ஒரு முறை விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கொள்கை முடிவெடுத்து அறிவித்தன. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் பெட் ரோலுக்கு ரூ.31ம், டீசல் ரூ.30ம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் தற்போது 40 சத விகிதம் அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருக்கிறது. ஆனால் அதற்கேற்றவாறு விலை குறைக்கப்படவில்லை. மாறாக எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து மோடி அரசும் மோசடி வேலைகளில் இறங்கியுள்ளது.கடந்த மூன்று வாரத்தில் இரண்டு முறை உற்பத்தி வரியை அரசு உயர்த்தியிருக்கிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல், டீசல் முழுவதும் வெளி நாட்டிற்கு தனியார் கார்ப்பரேட்கள் ஏற்றுமதி செய்கின்றன. அவர்களுக்கு வரிச்சலுகை. ஆனால் உற்பத்தியே செய்யாமல் இறக்குமதி செய்யும் கச்சா எண் ணெய்க்கு உள்நாட்டில் உற்பத்தி வரி.சாதாரண நேரத்தில் வரியை உயர்த்தினால் மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என, அசந்தநேரத்தில் மூச்சை பிடிப்பது போன்று, விலைகுறைந்திருக்கும் நேரத்தில் வரியை உயர்த்தியிருக் கிறது. இந்த மோசடி வித்தை நீண்ட நாள் எடுபடாது.

No comments:

Post a Comment