Saturday, December 6, 2014

அம்பேத்கர் -பாஜக - ஆர்.எஸ்.எஸ் - நாக்பூர்

இந்த ஆண்டு துவக்கத்தில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்காக நாக்பூர் சென்றிருந்த போது  அங்கே அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய "தீட்சா பூமி" என்ற இடத்தைப் பார்க்க சென்றிருந்தோம்.





அந்த இடத்தில் ஒரு பெரிய தூண் இருக்கிறது. அந்த தூணில் ஒரு கல்வெட்டு உள்ளது. புத்த மதத்தை தழுவிய அண்ணல் அம்பேத்கர் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் பின்பற்ற வேண்டிய இருபத்தி இரண்டு கோட்பாடுகளாக அறிவித்ததை அந்த கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளனர்.




இவை அனைத்துமே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சீடன் பாஜக விற்கு முற்றிலும் முரணானது.  ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இருக்கிற அதே நாக்பூரில் அதன் வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு எதிராக பிரகடனம் ஒலித்ததை அதனால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அதனால்தான் பாபர் மசூதியை இடிக்க அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை தேர்ந்தெடுத்து டிசம்பர் ஆறை பதட்ட நாளாகவும் இந்தியாவின் கறுப்பு தினமாக மாற்றி விட்டார்கள்.

இன்று பாரதீய ஜனதா தமிழகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை அனுசரித்துள்ளனர். அதற்கான தார்மீக உரிமை பாஜக விற்கு கொஞ்சமாவது இருக்கிறதா? 

வாக்குக்காக செய்யும் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலான மக்கள் உணர்ந்து வருகின்றனர். மற்றவர்களும் உணர்வார்கள்.

"தீட்சா பூமியில் நான் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் கீழே"


 

 

2 comments:

  1. அடுத்த பதிவில் அந்த இருபத்தி இரண்டு கோட்பாடுகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுங்கள்.

    ReplyDelete
  2. அப்பேத்கரின் 22 கோட்பாடுகளைப் படித்திருக்கின்றேன்
    ஆனர்ல் அவற்றை கல்வெட்டாக,இன்றுதான் தங்களால்
    காணுகின்றேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete