Saturday, December 27, 2014

சீனியர்களை ஓரம் கட்டிய ஜூனியர் சாமியார்



ரிமோட்டில் சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த போது ஒரு லோக்கல் சேனலில் கண்ணில் பட்டது  இந்தக் காட்சி. 

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு வேலூர் பொற்கோயில் சாமியார், ரத்னகிரி முருகன் கோயில் சாமியார், கலவையில் உள்ள சச்சிதானந்த சாமியார் இவர்களைத் தவிர எனக்கு யார் என்று தெரியாத ஒரு ஜடாமுடி சாமியார் ஆகியோர் உள்ளே நுழைகின்றனர்.

பொற்கோயில் சாமியாருக்கு முன்னே தட்டுக்களை நீட்ட அவர் அதிலிருந்த மாலைகளை எடுத்து அவரே போட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு மாலையை கையிலெடுத்தவர் அதை கழுத்து வரைக்கும் எடுத்துச் சென்று ஏனோ வேண்டாமென்று திருப்பிக் கொடுத்து விட்டு முழுவதும் ரோஜாப் பூக்களால் கட்டப் பட்ட மாலையை போட்டுக் கொள்கிறார். மற்ற சாமியார்களின் பார்வையில் ஏக்கம் தெரிகிறது.

அடுத்து ஒவ்வொரு சன்னதியாக போகிறார்கள். எல்லா இடங்களிலும் பொற்கோயில் சாமியாருக்கே முதல் மரியாதை. ஏதோ ஒரு சன்னதியில் பொற்கோயில் சாமியாருக்கு ஒன்று, இரண்டு என எலுமிச்சை மாலைகளை போட்டு, மூன்றாவது மாலையை போடும் முன்பாக கலவை சச்சிதானந்த சாமியார் அதனைப் பறித்து அந்த ஜடாமுடி  சாமியாருக்கு போட வைத்து விடுகிறார்.

ரத்னகிரி முருகன் கோயில் சாமியாரும் கலவை சச்சிதானந்த சாமியாரும்தான் வேலூர் மாவட்டத்தில் ரொம்பவுமே சீனியரானவர்கள். பொற்கோயில் சாமியார் ஆன்மீக வணிகத்திற்கு வந்து பத்து பதினைந்து ஆண்டுகள்தான் ஆகியிருக்கும்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மோடி ஓவர் டேக் செய்தது போல இவரும் மற்றவர்களை ஓவர் டேக் செய்து விட்டார். பாவம் இவர் முன்னே செல்ல மற்றவர்கள் பின் தொடர்கின்றனர்.

காரணம் என்ன தெரியுமா?

காசு, துட்டு, மணி, பணம், பணம்
 

11 comments:

  1. ஒரு பின்னூட்டத்தை புரியாமல் எழுதுவதில் உங்களுக்கு நிகர் வேறு யாருமே இல்லை திரு அன்பே சிவம் அவர்களே.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. திரு அன்பே சிவம், உங்கள் பின்னூட்டம் தவறான புரிதலில் எழுதப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டதால் அதை அகற்றுகிறேன்

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. திரு அன்பே சிவம், உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன? நான் என்ன எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என் வாயைக்கிளறாதீர்கள்.

      Delete
  5. காசில்லாற்கு கடவுளில்லை
    இததானே ஐயா இன்றைய நிலை

    ReplyDelete
  6. எங்கும் பணத்திற்கே மதிப்பு என்பது பலனாகிறது.

    இந்த "அன்பே சிவம்" என்கிறது யாருன்னு பார்க்கணும்.

    ReplyDelete
  7. அன்பே சிவம் உள்ளூர்க்காரர்தான் போல இருக்கிறது. அவர் ஏன் வம்பு பண்ணுகிறார்?

    ReplyDelete
  8. வேலூர் மாவட்டத்தில் நிறைய சாமியார்கள் இருக்கிறார்கள் போல! பொற்கோயில் சாமியார் இவ்வளவு சீக்கிரம் ஓவர் டேக் செய்து முன்னேறியது ஆச்சர்யம்தான்!

    ReplyDelete