Thursday, December 18, 2014

விசுவாசத்தால் வேலூர் மாநகராட்சிக்கு தண்டச் செலவு




"மக்கள் முதல்வர் அம்மா(!)" விற்கு  பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்ததும் அதிமுகவினர் நடத்திய போராட்டங்கள் உலகறிந்த செய்தி.

வேலூர் மேயர் ஒரு படி மேலாகச் சென்று வேலூர் மாநகராட்சிக் கூட்டத்தில் மைக்கேல் குன்காவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். அதனுடைய விளைவையும் அனுபவித்தார்.

சென்னை உயர்நீதி மன்றம் இச்செயலைக் கண்டித்தது. வேலூர் மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நகராட்சிகளின் இயக்குனருக்கு அவர் அனுப்பிய மன்னிப்பு கடிதம் போதாது. மாறாக சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு பிரமாண வாக்குமூலமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இன்று அந்த பிரமாண வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அந்த மன்னிப்பை வேலூர் மாநகராட்சி பகிரங்கமாக நாளிதழ்களில் விளம்பரமாக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இப்போது விளம்பரம் வர வேண்டும். அதற்கான செலவு என்னமோ மாநகராட்சி தலையில்தான் விடியப் போகிறது.

தன் தலைவி மீது வேலூர் மேயர் காண்பித்த விசுவாசத்தால் இப்போது மாநகராட்சிக்குத்தான் தண்டச் செலவு.

5 comments:

  1. தலைப்பை பார்த்து ஒரு நிமிஷம் பயந்தே போய் விட்டேன். விசுawesomeமினால் வந்த செலவோ என்று !

    ReplyDelete
    Replies
    1. நல்ல சொல் விளையாட்டு

      Delete
    2. என் பெயர் விசுவாசம், கல்லூரி படிப்பு Voorhees College அல்லவா, அதனால் வந்த சந்தேகம்

      Delete
  2. இதற்கான செலவை கட்சியோ இல்லை மேயர் தனது சொந்த பணத்தில் இருந்தோ செலவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete
  3. மொட்டை வெயில் மண்டையைப் பிளக்கும் வேலூரில் ஒரு மரம் கூட இல்லை?
    -எழில்

    ReplyDelete