என்ன வேண்டுமானாலும் அசிங்கமாக பேசலாம். எப்படி வேண்டுமானாலும் தரக்குறைவாக பேசலாம். தான் வகிக்கும் பொறுப்பிற்கு பொருத்தமில்லாமல் பேசலாம். தேச ஒற்றுமையை பாதுகாப்பேன் என்று பதவிப் பிரமாணத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு முரணாக பேசலாம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற இந்திய அரசியல் சாசனத்தை குழி தோண்டி புதைக்கும் வகையிலும் பேசலாம்.
பேசுங்கள், நன்றாக பேசுங்கள்.
என்ன அப்படி பேசுவதற்கு நீங்கள் மோடியின் மந்திரியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். மன்னிப்பு கேட்டால் போதும். எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுதந்திரமாய் திரியலாம்.
சரி மிஸ்டர் வெங்கைய நாயுடு அண்ட் அருண் ஜெய்ட்லீ, ஒரு வேளை நரேந்திர மோடியைப் பற்றியும் நிரஞ்சன் ஜோதி சாத்வி போல தரக்குறைவாக பேசினாலும் இது போல மன்னிப்பு கேட்டால் போதும், நடவடிக்கை தேவை இல்லை என்று நியாயப்படுத்துவீர்களா?
No comments:
Post a Comment