பாரத ரத்னா விருது என்பதை ஒழித்து விட்டாலே நன்றாக
இருக்கும். தகுதியற்றவர்களுக்கு வழங்கப் படுவதும் அதை விமர்சித்து பதிவு
எழுதுவதும் எரிச்சலாக இருக்கிறது.
வாஜ்பாயின் நல்லாட்சி பற்றி சில தினங்கள் முன்பாக
விரிவாக எழுதி விட்டேன். இணைப்பை இங்கே அளித்துள்ளேன். ஒரு ஆட்சியாளராக எந்த விதத்திலும்
பாரத ரத்னா விருதிற்கு தகுதியற்றவர் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.
ஒரு வேளை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்திருக்கக்
கூடுமோ என்று யாருக்காவது மனதின் ஓரத்தில் சந்தேகம் ஒட்டிக் கொண்டிருந்தால் அதை
சர்ப் போட்டு அகற்றி விடுங்கள். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் வாஜ்பாய் செய்த
துரோகத்தின் கறையை சர்ப், ரின், ஏரியல், நிர்மா என்று எந்த சோப்பு போட்டாலும்
நீக்க முடியாது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ல் உச்சத்தில்
இருந்த நேரம் பட்டேஷ்வர் என்ற இடத்தில் அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏழு பேரை
பிரிட்டிஷ் போலீசிற்கு காட்டிக் கொடுத்தவர் வாஜ்பாய். அவர்கள் வன்முறையில்
இறங்கினார்கள் என்று நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்லி அவர்களுக்கு தண்டனை
கிடைக்க காரணமாக இருந்தவரும் வாஜ்பாய்.
தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்
கொடுத்தவருக்கு தேசத்தின் உயர்ந்த விருது என்பது எவ்வளவு பெரிய அநியாயம்! அராஜகம்.
வாழும் நாளெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராக நச்சை
உமிழ்ந்து கொண்டிருந்த மதன் மோகன் மாளவியா, இறந்து போய் அறுபத்தி எட்டு
வருடங்களுக்குப் பிறகு பாரத ரத்னா கொடுப்பதற்கும் கோட்சேவிற்கு சிலை வைப்பதற்கும்
எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றை திருத்த முயலும் தில்லுமுல்லு இது.
பின் குறிப்பு
வாஜ்பாய் பொய்சாட்சி சொன்னதற்கான ஆவணங்களை அம்பலப்
படுத்தியவர், தற்போது பாரதீய ஜனதாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தரகர்
சுப்ரமணிய சுவாமிதான்.
பாரத ரத்னா வழங்கப்படும் போதெல்லாம் சர்ச்சைகள் வலுத்துக் கொண்டே செல்கிறது! இந்த விருதையே நீக்கி விடலாம்!
ReplyDelete