Friday, December 5, 2014

காவியத் தலைவன் சிவாஜி




காவியத் தலைவன் திரைப்படத்திற்கு நாளை செல்லலாமா என்றொரு யோசனை இருக்கிறது. கத்தி போகலாம் என்று பல சனிக்கிழமைகள் திட்டமிட்டு ஆனால் வேலைகள் வந்து நான் செல்வதற்குள் அப்படம் வேலூரை விட்டு சென்று விட்டது. காவியத்தலைவன் நிலை என்ன ஆகுமோ?

காவியத்தலைவன் விமர்சனங்களில் ராஜபார்ட் ரங்கதுரை பற்றிய ஒப்பீடு வந்தது. சரி அப்படத்தில் ஏதாவது ஒரு காட்சியை பார்ப்போம் என்று யுட்யூபில் தேடிய போது இக்காட்சி கிடைத்தது. அல்லி தர்பார் நாடகம் இது.   

நாடகத்தில் தன் கலை வாழ்வை தொடங்கிய நடிகர் திலகம் இயல்பாக நடித்துள்ளது என்பதில் எந்த ஆச்சர்யமும் கிடையாது. ஆனால் தான் நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலைப் பிடித்துக் கெஞ்சுவதாக ஒரு காட்சி வருகிறது.

இன்றைக்கு உள்ள எந்த ஒரு பெரிய கதாநாயக நடிகரும் தன்னை விட கம்மியான பிரபலம் உள்ளவர்களின் காலில் விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் எடுக்க அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை.

அங்கேதான் நடிகர் திலகம் நிற்கிறார் காவியத் தலைவனாக.
 

2 comments:

  1. //இன்றைக்கு உள்ள எந்த ஒரு பெரிய கதாநாயக நடிகரும் தன்னை விட கம்மியான பிரபலம் உள்ளவர்களின் காலில் விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் எடுக்க அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை.//
    விளங்கிடுச்சு. அப்படிபட்ட நாட்டில் அந்த காலத்தில் சிவாஜி என்று நடிகர் இன்றைக்கு உள்ள பெரிய நடிகர்கள் மாதிரி போலி கௌரவம் பார்க்காம இருந்திருக்கார்.
    அவர் காவியத் தலைவன் தான் .

    ReplyDelete