மிகுந்த கோபத்தோடு இப்பதிவை எழுதுகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பேரணி, பொதுக்கூட்டத்தோடு ஆம்பூரில் தொடங்கியது. நேற்றும் இன்றும் பிரதிநிதிகள் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. ஆம்பூரிலிருந்து வீடு திரும்பிய கையோடு இதை எழுதுகிறேன்.
நேற்று காலை மாநாடு நடைபெற்ற மண்டபத்தின் முன்பாக கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வேளையில் சாலையின் மறு பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பத்து பதினைந்து வாகனங்களில் சென்றார்கள். அந்த படையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்றார் என்று நினைக்கிறேன்.
இங்கே கொடியேற்றுதலைப் பார்த்து விட்டு அந்த வாகனங்களில் சென்றவர்கள் ஓநாய்கள் போல ஊளையிட்டுக் கொண்டே போகிறார்கள். இன்னொரு கட்சியின் நிகழ்ச்சி நடக்கும் போது அநாகரீகமாக நடந்து கொள்வதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் போல.
அல்லது அந்த வாகனங்களில் சென்றவர்கள் கூலிக்கு கூப்பிட்டு வரப்பட்ட வாடகைத் தொண்டர்களாகவும் இருக்கலாம்.
எது எப்படியானாலும் காங்கிரஸ் கொடி கட்டிய கார்களில் சென்றவர்கள் நடந்து கொண்டது அசிங்கம். அவர்களுக்கும் அவர்கள் கட்சிக்கும்.
No comments:
Post a Comment