நாளை விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளிவரப் போகிறது.
கூர்மையான கத்தியா இல்லை முனை மழுங்கிய கத்தியா என்பது நாளை தெரிந்து விடும்.
இனிமேல் திரைப்படம் எடுப்பதற்கு முன்பாக ஒரு அறிவிப்பு செய்து யாரெல்லாம் என்னென்ன காரணத்திற்காக தடை கேட்கிறார்கள் என்று ஒரு பொது விசாரணை நடத்தி அதற்குப் பிறகு படப்பிடிப்பை தொடங்கலாம்.
இதோ விஜய் அளித்துள்ள அறிக்கை
லைகா என்ற பெயரை எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்களே, அவர்களால் படம் வெற்றி பெற்றால் லாபம் லைகா வுக்குச் செல்லுமே அதை தடுக்க முடியுமா?
பெயரை நீக்கியதாலேயே லைகா என்ற பெயர் இப்போது அனைவருக்கும் தெரிந்ததாக மாறி விட்டதே! தமிழ்நாட்டில் உள்ள அனைவரிடமும் சென்று உங்கள் நினைவில் உள்ள லைகா என்ற பெயரை நீக்குங்கள் என்று மிரட்டுவார்களா?
அபத்தமாக உள்ளது.
நானும் என் பங்கு அபத்தமாக இந்த பதிவில் போட்டுள்ள படத்திலிருந்து லைகா என்ற பெயரை நீக்கி விட்டேன்.
நீங்களும் லைகா பெயரை நீக்கிவிட்டீங்களா :) நான் இனி தான் லைகா மொபைல் காட் தேடி வாங்க போகிறேன்.
ReplyDelete