ராமநாதபுரம் எஸ்.பட்டிணம் காவல் நிலையத்தில்
விசாரணைக்குக் கூட்டிப் போனவரை சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொன்ற வெறிச்செயல் பழைய
செய்திதான். அப்பட்டமான கொலை, கொலையைத் தவிர வேறில்லை.
தன்னை கத்தியால் தாக்க வந்தவரிடமிருந்து
தற்காப்புக்காக சுட்டேன் என்பதெல்லாம் வழக்கமான போலீஸ் ஜோடனைகள்தான். காவல்துறை
தங்களைச் சேர்ந்தவர்களை எப்போதுமே பாதுகாக்கும். அதுதான் அதன் உண்மையான நிறம்.
ஆனால் அந்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மீது
நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காவிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் கூச்சல்
போடுகின்றார்கள்? இதிலே I Support
Kalidass என்று வெட்கமே இல்லாமல் பலர் வெளிப்படையாக முக நூலில் சொல்லிக்
கொள்கிறார்கள்.
இந்த கொடூரத்திற்கும் காவிக்கூட்டத்திற்கும்
சம்பந்தமே கிடையாது. ஆனாலும் ஏன் இவர்கள் வான்டட்டாக வந்து வண்டியில்
ஏறுகிறார்கள்?
இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.
ஒன்று கொலை செய்த காளிதாஸ் காவிக்கூட்டத்தைச்
சேர்ந்தவராக இருக்க வேண்டும். (அவர் காவிக்கூட்டம் என்பதற்கு சான்றாக
காண்பிக்கப்படும் முகநூல் ஸ்க்ரீன் ஷாட்டை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஃபேக் ஐடியாகவும் இருக்கலாம்). தங்களைச்
சேர்ந்தவர் என்றால் அந்த கொலை நியாயமாகி விடுமா?
இரண்டாவது காரணம் ; கொல்லப்பட்டவர் முஸ்லீம்
என்பதால் அவரைக் கொன்றால் நடவடிக்கை அவசியம் இல்லை என்று சங் பரிவார் கூட்டம்
நினைக்கிறது போலும்.
இரண்டுமே மோசமான விஷயம். ஆனால்
காவிக்கூட்டத்திற்குத்தான் நியாயம், தர்மம், சட்டம் என்று எதுவுமே கிடையாதே….
No comments:
Post a Comment