Sunday, October 19, 2014

மோடி நியாயஸ்தர் என்று முன்னாள் நீதிபதி சொல்வாரோ?






 ராஜபக்சேவை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக வருந்துகிறேன் - முன்னாள் நீதிபதி
 

கொழும்பு,அக்.18-இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக இப்போது வருந்துகிறேன் என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா தெரிவித்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு மகிந்த ராஜபக்சே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, “ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” என்ற சுனாமி நிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது.அப்போது, மகிந்த ராஜபட்சே ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்து கேள்விக்குறியானது. இது பற்றி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் என்.சில்வா ராஜபக்சே மீதான குற்ற விசாரணையை நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தார். 

இது பற்றி கொழும்பு புதிய நகரமண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் இலங்கை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா பேசியதாவது:-2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் ஜனாதிபதி மகிந்தராஜபக்சேவை ரிமாண்டில் போட்டு சிறையிலடைப்பதற்கான வாய்ப்பு தான் இருந்தது. அப்போது, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்கள் மீதான சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து, அவர் சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து விடுவித்தேன் . அன்று அவரை சிறையில் அடைத்திருந்தால், இன்று அவர் ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. அன்று எனது தீர்ப்பால் அவரால் ஜனாதிபதியாக போட்டியிட முடிந்தது. ஜனாதிபதியாக நியமனம் பெற்றார். இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இப்போது இவர் செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது, உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்து விடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துக்கள் சுரண்டப்படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.அவர் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புப்படி தகுதியை இழந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

நன்றி தீக்கதிர் 19.10.2014

இச்செய்தியைப் படித்தால் ராஜபக்சே போல இல்லாமல் மோடியும் அமித் ஷாவும்  நியாயஸ்தர் கள்  என்று கேரள மாநில ஆளுனர்  எனும் பம்பர் பரிசைப் பெற்ற   முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி பி.சதாசிவம் சொல்வாரோ? 



2 comments:

  1. it is true. he can tell like that.

    Seshan/ Dubai

    ReplyDelete
  2. அங்கே ராஜபக்சேவை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நீதிபதி வருந்தினார். இங்கே நீதிபதி தண்டணை கொடுத்த ஊழல் குற்றவாளி சிறையில் இருந்தபோ 193 பேர் தற்கொலை. ஜாமீனில் வந்தபோ மலர்கள் தூவி தமிழர்கள் வரவேற்றனர். ஆரத்தி எடுத்தனர், நடனமாடினர், போலீஸார் சல்யூட் அடித்தனர்,உலகத்திலே எங்கும் நடக்க முடியா மகா கேவலம்.

    ReplyDelete