Thursday, October 9, 2014

அளிக்கப்பட்டது உண்மையில் 4 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

எல்லோரும் ஜெ விற்கும் மற்றவருக்கும் நான்கு  ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதாக பொதுவாக எல்லோரும் எழுதிக் கொண்டு  இருக்கிறார்கள். உண்மையில் அவருக்கு அளிக்கப்பட்டது நான்கரை  ஆண்டுகள் சிறைத்தண்டனை.




ஆம்

Sec. 13 (1) (e) R/w. Sec. 13 (2) of  the P.C. Act,  படி நான்கு  ஆண்டுகளும் 

Sec. 120-B I.P.C.,  R/w. Sec. 13 (2) of P.C. Act   படி ஆறு மாதங்களும் 

அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் சொன்ன காரணத்தால் இன்னொரு ஆறு மாதம் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

அதே நேரம் நூறு கோடி ரூபாய் அபராதத்தை கட்டாவிட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. 

இரண்டாவது பிரிவின்படி ஒரு லட்ச ரூபாய் அபராதம். அதைக் கட்டாவிட்டால் இன்னும் ஒரு மாதம் சிறையாம்.

ஆனால் அபராதத்தை கட்டாவிட்டால் என்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அபராதத்தை வ்சூலிக்கும் வழியும் கூட தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. 

2 comments:

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=1088515
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1088502

    what is your opinion about both this news ?

    ReplyDelete
  2. சசி தரூர் ஒரு மோசமான ஆசாமி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவரது மனைவி இறந்தபோதே அந்த மனிதன் கைது செய்யப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன்

    ReplyDelete