Saturday, October 25, 2014

இரண்டாவது திருமணத்திற்காக விவாகரத்து கேட்கக் கூடாதாம்







அனேகமாக தலைப்பைப் பார்த்து பலர் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

இது பாகிஸ்தான் விஷயம்.

கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அதற்காக கணவனிடமிருந்து விவாக ரத்து கேட்கும் உரிமை மனைவிக்கு உண்டு. இது பாகிஸ்தான் குடும்பச் சட்டத்தில் உள்ள உரிமை இது.

இந்த ஷரத்தை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான்  Council of Islamic Ideology (CII),   என்ற அமைப்பினுடைய தலைவர் மௌலானா மொகமது கான் ஷீரணி என்பவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.  

சமமாக நடத்தப்படவில்லை, கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்ற காரணங்களுக்காக வேண்டுமானால் மனைவி விவாக ரத்து கேட்கலாமே தவிர கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டான் என்ற காரணத்திற்காக விவாக ரத்து கேட்பது தவறு என்பது அந்த பெரிய மனிதரின் வாதம். இதில் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.

அதாவது கணவன் எத்தனை திருமணங்கள் செய்து கொண்டாலும் அதை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பது அவரது விருப்பம் போலும்.

எந்த வித உணர்வும் உரிமையும் இல்லாமல் பெண்கள் அடிமைகளாகவே கணவனைச் சார்ந்தே தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான் அடிப்படைவாதிகளின் கருத்தாக உள்ளது.

இதிலே எந்த மதமும் விதி விலக்கல்ல.

பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை பறிக்க விரும்புகிற மோகன் பகவத்தின் அறிக்கைக்கும் மொகமது கான் ஷீரணியின் விருப்பத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இரண்டுமே கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புக்கள் மொகமது கான் ஷீரணியை கண்டித்துள்ளன. மோகன் பகவத்தை யார் கண்டிப்பது?

2 comments:

  1. i think you have lost your thinking power.

    apple and orange are how come same!!!!!!

    Seshan/ Dubai

    ReplyDelete
  2. அழுகிப் போன ஆப்பிளும் ஆரஞ்சும் ஒன்றுதான் சேஷன் சார். பெண்கள் ஆண்களையே சார்ந்திருக்க வேண்டும் என்ற அழுகிப் போன பிற்போக்குச் சிந்தனையே இருவருக்கும்.
    நான் சரியாகவே சிந்திக்கிறேன் என்பதை நீங்கள் சரியாக சிந்தித்து உணர வேண்டுகிறேன்

    ReplyDelete