Sunday, October 12, 2014

கனிவு, கம்பீரம், கோபம் இன்னும் பல உணர்வுகளோடு

 SivajiGanesan 19620824.jpg

நடிகர் திலகத்தின் சில முக்கியமான காட்சிகளை சில நாட்கள் முன்பாக பதிவிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு. முதல் சில காட்சிகள்  அவர் சில வ்ரலாற்றுப் பாத்திரங்களாக படங்களில் மேடைகளில் தோன்றிய காட்சிகள்.

தத்துவ மேதை சாக்ரடீஸ்  சிவாஜி மூலம் நம் கண் முன்னே நிற்கிறார்.

கோபத்தோடு போருக்குப் புறப்படும் காட்சி தொடங்கி குற்றவுணர்வில் மனம் மாறும் இறுதிக்காட்சி வரை  சாம்ராட் அசோகன் தெரிவாரே தவிர சிவாஜி கணேசன் அல்ல.

இப்படி ஒரு அழகுத்தமிழ் மூலம் சேரன் செங்குட்டவன்  பாத்திரத்தில் நம்மை ஈர்க்க நடிகர் திலகம் போல் வேறு எவரேனும் உண்டோ?

தமிழ் நாட்டு அரசனாக மட்டுமல்ல, ஷேக்ஸ்பியரின் ஓதெல்லா பாத்திரமும்   அவருக்கு கைவந்த கலைதான்.

சதிகாரர்களால் உயிருடன் கொளுத்தப்பட்ட  நந்தனாரின் பணிவையும் இங்கே நீங்கள் பார்க்கலாம் 

காவல்துறையின் தடியடியால் திருப்பூர் குமரன் கொல்லப்பட்ட அதே நேரம் அந்த பாத்திரத்தை ஏற்ற ரங்கதுரையும் சுடப்படுவார்.

ஜூலியஸ் சீசராக இவர் நடித்த பின்பு   வேறு எவருக்காவது அது பொருந்துமா என்ன?

இதெல்லாம் திரையில் வந்த மேடைப் பாத்திரங்கள். இன்னும்  நான்கு  காட்சிகளையும் பாருங்கள்.

கனிவு மிக்க மருத்துவராக    தோன்றிய அதே படத்தில் இன்னொரு பாத்திரத்தில் தெருக்கூத்து கலைஞராகவும் மட்டும் அசத்தவில்லை  இவற்றைத் தவிரவும் இன்னும் ஏழு பாத்திரங்கள் இதே படத்தில் உண்டு. 

ராஜ கம்பீரம் என்பதை இவரைப் பார்த்துத்தான் அரசர்களும் கூட கற்றுக் கொள்ள வேண்டும் 

அவமானப்படுத்தப் போது அரசவையில் பொங்கும் கர்ணனின் கோபத்தையும் சபதத்தையும் பார்க்க  கடைசி ஐந்து நிமிடங்கள் வரை காத்திருங்கள்.

அனைத்து உணர்வுகளையும் திறம்பட வெளிப்படுததி இலக்கணமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் மட்டுமே.

 


1 comment:

  1. ஆகா, அற்புதமான காட்சிகள் ஐயா
    கண்களை விட்டு காட்சிகள் அகல மறுக்கின்றன
    நன்றி நண்பரே

    ReplyDelete