Thursday, October 2, 2014

இந்தியக் கொடியை கசக்கிய எம்.ஜி.ஆர், ஜெ

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதும் அதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றதும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒலிம்பிக்கிலும் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்.

 It took a shoot-out to determine the winner as both the teanm were locked 1-1 in the regulation time.

Hockey India Pakistan Final


தலைப்பிற்கு சம்பந்தமில்லையே என்று யோசிக்கிறீர்களா?

இந்த செய்தியைப் பார்த்த போது முப்பத்தி இரண்டு  வருடத்திற்கு முன்பாக ஏதோ ஒரு வாரப்பத்திரிக்கையில் ஜெ எழுதிய ஒரு கட்டுரை நினைவிற்கு வந்து விட்டது.

வார்த்தைகள் அப்படியே நினைவிற்கு  வரவில்லையென்றாலும் விஷயம் இதுதான்.

"1982 ல் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க புரட்சித்தலைவரோடு சென்றிருந்தேன். ஜானகியம்மாவும் வந்திருந்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஹாக்கி இறுதிப் போட்டிக்கு போயிருந்தோம்.  எனக்கும் ஜானகியம்மாவிற்கும் நடுவே புரட்சித்தலைவர் அமர்ந்திருந்தார். 

இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த சின்ன அளவிலான தேசியக் கொடியை எல்லோருக்கும் கொடுத்தார்கள். இந்தியா முதல் கோலை அடித்ததும் மிகவும் சந்தோஷமாக எல்லோரும் கொடியசைத்தோம். ஆனால் ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது. அதற்குப் பிறகு பாகிஸ்தான் ஆறு கோல்களை அடித்து வெற்றி பெற்று விட்டது.

நாற்காலியிலிருந்து எழுந்திருக்கும் போதுதான் என் கையில் இருந்த தேசியக் கொடியை பதட்டத்தில் கசக்கி சுருட்டியிருந்தேன் என்பதை கவனித்தேன்.. ஐயோ புரட்சித் தலைவர் என்ன சொல்வாரோ என்று பார்த்தால் அவர் கையில் இருந்த கொடியும் அது போலவே கசங்கியிருந்தது"

இப்படி நமக்கு ஞாபக சக்தி இருப்பது வரமா? சாபமா? 


2 comments:

  1. Good bad story teller.

    ReplyDelete
    Replies
    1. இதிலே கதை என்பது எங்கே வருகிறது அனானி?

      Delete