Thursday, October 23, 2014

கணவன்களுக்கு எந்த நோன்பும் கிடையாதா?

 http://mmimages.maalaimalar.com/Articles/2012/Dec/a126c2f0-24da-4faa-b7c9-4f0a71bea987_S_secvpf.gif

தீபாவளிக்காக நேற்று அலுவல்கம் விடுமுறை.  இன்றும் அலுவலகம் கொஞ்சம் வெறிச்சோடித்தான் இருந்தது. வேலூரைப் பொறுத்தவரை இன்று பெரும்பாலானவர்கள் நோன்பு  இருப்பார்கள். கேதார கௌரி நோன்பு என்று சொல்வார்கள். பெண்கள் அதிரசம் செய்து துணியில் மூடி கோயிலுக்குப் போவதை பார்க்கலாம். அதனாலோ என்னமோ இன்று நிறைய பெண் ஊழியர்களும் அதிகாரிகளும் விடுப்பில் இருந்தார்கள்.

இந்த நோன்பின் நோக்கம் என்பது கணவன் நீடூழி வாழ வேண்டும் என்பதுதான்.

கிட்டத்தட்ட இதே நோக்கத்தோடு காரடையான் நோன்பு என்பதும் அனுசரிக்கப்படுகிறது. அது எமனின் பிடியிலிருந்து சத்யவானை சாவித்திரி காப்பாற்றிய நாளில் அனுசரிக்கப்படுவதாம்.

வட மாநிலங்களில் "கர்வா சவுத்" என்று ஒரு விரதம்.  இரவு சந்திரன் உச்சிக்கு வரும் வரை சொட்டுத் தண்ணீர் கூட குடிக்காத விரதம் அது.

கணவனுடைய உயிருக்காக மனைவி கடினமான விரதம் இருக்கும் போது எனக்குத் தெரிந்து மனைவிக்காக கணவன் எந்த விரதமும் இருப்பது போல தெரியவில்லையே..

ஏன்? ஏன்? ஏன்?

 

2 comments:

  1. ஆமாம் நண்பரே
    நியாயமான கேள்விதான்

    ReplyDelete
  2. because the life of man is in the hands of woman. very simple.

    ReplyDelete