Tuesday, October 14, 2014

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வெல்ல அல்வா – ருசி கேரண்டி


சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுட்டும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம், பூரணம் செய்து போளி செய்தும் சாப்பிடலாம், போளி அளவிற்கு மெனக்கெடாமல் அதே நேரம்  கொஞ்சம் கூடுதல் சுவையாக சாப்பிட  இந்த வழிமுறையை முயற்சி செய்து பாருங்களேன்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துறுவல், பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம், வறுத்த முந்திரி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 
வாணலியில் வெல்லத்தைப் போட்டு பாகு பொங்கி வரும் போது தேங்காய் துறுவல், நறுக்கிய பேரிச்சம் பழம் சேர்த்து பிறகு மசித்து வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை போட்டு கிளறவும். நன்றாக சேர்ந்து வரும்போது சிறிது நெய் சேர்த்து, முந்திரி சேர்த்து ஏலக்காய்ப் பொடி தூவி, மீண்டும் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்தால் அதுதான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வெல்ல அல்வா. 


ருசிக்கு நான் கேரண்டி.   

1 comment:

  1. ஐய்யா.. ராமன் ஐயா.. போன வாரம் தான் இந்த கிழங்கில் உருண்டை செய்வது எப்படி என்று கடல் தாண்டி ஒரு பதிவு போட்டேன். அதனை மக்கள் செய்து சாப்பிடும் முன்பே, இதில் அல்வா எப்படி சிஎவது என்று எனக்கு அல்வா கொடுத்து விட்டீர்களே... பரவாயில்லை. நானும் செய்து பார்கின்றேன்.

    ReplyDelete