மைக்கேல் குன்ஹா அளித்துள்ள 1136 பக்க தீர்ப்பை ஒரு ஐந்து நாட்கள் சிரமப் பட்டு
படித்து முடித்தேன். அவ்வப்போது காணாமல் போன இணையதள இணைப்பிற்குத்தான் நன்றி சொல்ல
வேண்டும். இல்லையென்றால் முக நூலிலோ இல்லை வேறு ஏதாவது பக்கங்களைப்
பார்ப்பத்தில்தான் நேரம் செலவழிந்திருக்கும். இன்னும் கூட ஓரிரு முறை படிக்க
வேண்டும். மிகவும் கடினமான உழைப்பை நீதிபதி செலுத்தியுள்ளார் என்பதை மட்டும்
உறுதியாக சொல்ல முடியும்.
இத்தீர்ப்பை ஆய்வு செய்து ஒரு டாக்டரேட் பட்டமே
வாங்கக்கூடிய அளவிற்கு விஷயங்கள் உள்ளது. அப்படியென்றால் தீர்ப்பை வைத்து எத்தனை
பதிவுகள் எழுத முடியும் என்று பாருங்கள்.
ஜெ விடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்,
தங்க, வைர நகைகள், கடிகாரங்கள், பிக்ஸட் டெபாசிட் பத்திரங்கள், நில ஆவணங்கள், இவை
தவிர சூட்கேஸ்கள், போட்டோ ஆல்பங்கள், என மொத்தம் 1606 பொருட்களின் பட்டியல் உள்ளது.
அந்த பட்டியலை முழுமையாக வலைப்பக்கத்தில் வெளியிட
இடம் போதுமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.
அந்த நகைகளில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட நகைகள்
என்று தனியாக ஒரு பட்டியல் எடுத்து அவற்றில் பதிக்கப்பட்டுள்ள வைரக்கற்களின்
எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தேன்.
வளையல், தோடு, பிரேஸ்லெட், நெக்லஸ், பதக்கங்கள்,
ஒட்டியாணம் என்று மொத்தம் 161 நகைகள். அவற்றில் பதிக்கப்பட்டுள்ள வைரக் கற்களின் எண்ணிக்கை மொத்தம் 15038. முத்து, பவழம், கோமேதகம், நீலம் என்று மற்ற
விலையுயர்ந்த கற்களின் எண்ணிக்கையை நான் கண்டுகொள்ளவில்லை.
1044 கிராம் (அதாவது 130 1/2 சவரன்) எடையில் செய்யப்பட்ட ஒட்டியாணத்தில் மட்டும் 2389 வைரக்கற்களும் 18 எமரால்டு, 9 ரூபி கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
அநேகமாக தமிழகத்தில் உள்ள வைரக்கற்களில்
கால்பங்காவது ஜெ விடம்தான் இருந்திருக்கும் போல.
தீக்குளித்த, விஷமருந்திய, நெஞ்சு வலி வந்த, சுண்டு
விரலை வெட்டிக் கொண்ட, மொட்டையடித்துக் கொண்ட, யாகம் நடத்துகிற தொண்டர்களுக்கு இந்த
விஷயம் தெரியுமா? இல்லை அதெல்லாம் மைசூர் மகாராஜா கொடுத்தது, சினிமாவில் நடித்த
போது வாங்கியது என்று கீறல் விழுந்த பிளேட்டையே மீண்டும் ஓட விடுவார்களா?
சினிமாவில் நடித்த போது கொடுத்தது SIR, TOKEN OF APPRECIATION....
ReplyDeleteSESHAN/DUBAI
அப்படியே ஆகட்டும்
Deleteநானும் படித்தேன், நகைகளை தவிர வளைத்துப்போட்ட நிலங்களின் விவரங்களும் உள்ளன. தவிர டுபாக்கூர் கம்பெனிகளின் விவரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ReplyDeleteஇன்னும் பல பதிவுகள் இத்தீர்ப்பை வைத்து எழுதலாம்
Deleteஅநேகமாக தமிழகத்தில் உள்ள வைரக்கற்களில் கால்பங்காவது ஜெ விடம்தான் இருந்திருக்கும் போல. (இப்பத்தான் கண்டுபிடிச்சீங்களா தோழர் )
ReplyDeleteதீக்குளித்த, விஷமருந்திய, நெஞ்சு வலி வந்த, சுண்டு விரலை வெட்டிக் கொண்ட, மொட்டையடித்துக் கொண்ட, யாகம் நடத்துகிற தொண்டர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
சரி விடுங்க அவர்கள் அடிமட்ட தொன்டர்கள் அவர்களை விட அறிவாளிகள் இந்த தீர்ப்பு வருமுன் என்ன சொல்லி கூட்டு கொண்டார்கள் தோழர்கள்.
அதெல்லாம் மைசூர் மகாராஜா கொடுத்தது, சினிமாவில் நடித்த போது வாங்கியது என்று கீறல் விழுந்த பிளேட்டையே மீண்டும் ஓட விடுவார்களா?
எனக்கு தலைமை சொல்வதுதான் வேதம் என்று அவர்கள் இருக்கலாம் ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் இனியாவது செந்தலைகள் இந்த ___________ கட்சிகளின் வாசலில் நிற்க மாட்டோம் என்று உறுதி எடுத்தால் .... ஒரு நாள்.,,, வாய்ப்பிருந்தால் கீழ்வானம் சிவக்கும் யோசிப்பார்களா காம்கள்...என்று காத்திருக்கிறேன்... ம்.ஹூம்.காத்திருக்கிறோம்..
இதோ இப்போது மதவாத சக்திகள் இந்திய அதிகார இயந்திரத்தை ஆட்டி வைக்கிறதே, அதை தடுக்க வேண்டும் என்பதைத் தவிர மார்க்சிஸ்ட் கட்சிக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது. தேர்தல் உறவு இருந்த காரணத்தால் எந்த பிரச்சினையிலாவது சமரசம் செய்து கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா? கீறல் விழுந்த ரிகார்ட் உங்களிடமும் இருக்கிறது போல. சரி இடதுசாரிகள் தனியாக போட்டியிட்ட போது அவர்களை ஆதரித்து ஏதாவது எழுதினீர்களா தோழர்? இடதுசாரிகளின் ஆட்சி நேர்மையாக நடந்தது என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறீர்களா?
Deleteஇடதுசாரி தலைவர்களின் தியாகத்தையும் நேர்மையையும் பரப்புரை உங்களைப்போன்றோர் செய்வது போதாது என்பதுதான் என் ஆதங்கம்.
Deleteஆகா...உண்மையிலேயே அரிய தகவலுக்கு நன்றி நண்பரே. அநதத் தீர்ப்பு நகல் எங்கே கிடைக்கும் தெரிவித்து உதவுவீர்களா?
ReplyDeleteதோழரே, உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். அனுப்பி வைக்கிறேன்
DeleteRaman, appreciate your reading..There are lot of key takeaways in his vertict for good people.thanks for sharing here.
ReplyDelete