எப்பவுமே ரொம்ப சீரியசாவே எழுதனுமா என்ன?
கொஞ்சம் மாறுதலா, பெங்களூர்
பற்றி வந்த ஒரு மின்னஞ்சல் உங்களுக்காக தமிழில்.
இதில் கடைசி விஷயத்தை நான்
ரொம்பவே ரசிச்சேன். திரு நாராயண மூர்த்தி அவதூறு வழக்கு போடாம இருந்தா சரி.
1) பெங்களூரில்
நீங்கள் ஒரு கல்லை வீசினால் அது நாய் மீதோ இல்லை ஒரு சாப்ட்வேர் ஆசாமி மீதுதான்
விழும்.நாயின் கழுத்தில் பட்டை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் சாப்ட்வேர்
ஆசாமி கழுத்தில் கண்டிப்பாக இருக்கும், டை என்ற பெயரில்.
2) மற்ற
ஊரில் சாலையின் இடது பக்கத்தில் சென்றால் (Left side of the Road)
பெங்களூரில் சாலையில் இருக்கும் இடத்தில் (Left in the road) மட்டுமே செல்ல முடியும்.
3) பெங்களூரில்
சாலை விபத்தை ஏற்படுத்த சுலபமான வழி என்னவென்றால் சாலை விதிகளை பின்பற்றுவதுதான்.
4) பெங்களூரின்
முக்கியமான முதல் வணிகம் Paying Guest. அதற்குப் பிறகுதான் தகவல் தொழில் நுட்பத்
துறை.
5) பெங்களூரில்
ஒருவர் டிராபிக்கில் வண்டியை நிறுத்துகிறார், அவரைப் பார்த்து மற்றவர்களும்
நிறுத்துகிறார் என்றால் அந்த முதல் நபர் போக்குவரத்துக் காவலரை பார்த்து விட்டார்
என்று அர்த்தம்.
6) பெங்களூரில்
மழை பெய்கிறது என்றால் எந்த பகுதி என்று மட்டும் கேட்காதீர்கள், எந்த தெரு, எந்த
குறுக்குச் சந்து என்றும் கேளுங்கள்.
7) பெங்களூரில்
மட்டும் தூரம் (Distance) நேரத்தை வைத்து கணக்கிடப் படுகிறது.
8) சாப்ட்வேர்
ஆசாமிகள் குறைந்தபட்சம் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பதாகவே மளிகைக் கடை, ஆட்டோ
ஓட்டுனர் முதல் வீட்டு ஓனர் வரை நினைக்கிறார்கள்.
9) பெங்களூரில்
மருந்துக்கடைகளை கண்டுபிடிப்பதை விட மதுபானக் கடைகளை கண்டுபிடிப்பது மிகவும்
சுலபம்.
10) பெங்களூரில்
ஹிந்தி மொழியை விட C மொழி தெரிந்தவர்கள் அதிகம்.
11) பஸ்
டிரைவர்கள் பிரேக்கிறகுப் பதிலாக ஹாரன்தான் உபயோக்கிறார்கள்.
12) பெங்களூர்
ஏர்போர்ட் ஆந்திராவில் உள்ளது.
13) பெங்களூரில்
பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தை “கொத்தில்லா’ (தெரியாது) முன் பக்கம் வழியா
பஸ்ஸில ஏறரயே, நீ ஆணா, பெண்ணா என்ற கண்டக்டரின் கேள்விக்குக் கூட.
14) வாடகைக்கு
வீடு வேண்டும் என்று கேட்ட ஒருவருக்கும் வீட்டு ஓனருக்கும் நடந்த உரையாடல் இது.
எங்க
வேலை பாக்கறீங்க?
இன்போசிஸ்
கம்பெனியில்.
அந்த
பஸ் கம்பெனிதான? நாங்க ஐ.டி ல வேலை பாக்கறவங்களுக்கு மட்டும்தான் வீடு கொடுப்போம்.
கவர்ன்மெண்ட் பஸ்ஸ விட உங்க கம்பெனில நிறைய பஸ் ஓடுது போல.
பெங்களூரின் நேற்றைய ஜாமீன் வழக்கு பற்றிய பதிவு இது என்று நினைத்து வந்திருந்தால்
Sorry Sorry
Sorry
கடைசியா சொன்ன "Sorry Sorry Sorry"கூட பெங்களூர் ஜோக் தான். எப்படியா?
ReplyDeleteபங்களூரில் வழக்கில் மாட்டி ஜாமீன் கேட்டா, வரும் ஒரே பதில்..
"Sorry.. Sorry.. Sorry"
நல்ல பதிவு, நானும் பெங்களூரை சார்ந்தவன் என்பதால் கொஞ்சம் கூடவே ரசித்தேன்.
8. பெங்களுருக்கு போவானேன் ? சென்னையிலே 2 லட்சம் மாதத்திற்கு வாங்கும் பல்லாயிரக்கனக்கான மக்கள் அய் டி துறையில் உண்டு. சில வருடங்களுக்கு முன்பே வேலையில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வெளியில் , கடனில் மூழ்கி உள்ளதாக சொல்வார்கள். இவர்கள் பலருக்கு 2 அல்லது 3 க்கு மேற்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நிச்சயம் உண்டு. புதிதாக வருவோருக்கு மட்டுமே சிரமம்.
ReplyDeleteமற்ற துறைகளை விட இங்கு சம்பளம் நிச்சயம் மிக அதிகம்.