Monday, October 13, 2014

இரண்டு கேள்விகள், சொல்வீர்களா, பதில் சொல்வீர்களா மோடிஜி?





தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ் முகநூலில்  வெளியிட்ட ஒரு வேண்டுகோளை பலரும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்றும் குறிப்பாக முஸ்லீம் கடைகளில் வாங்க வேண்டாம் என்று அப்பட்டமான மத துவேஷ பிரச்சாரம் அந்த வேண்டுகோள். கிறிஸ்துவர் கண்டுபிடித்த கணிணியில் கிறிஸ்துவர் மார்க் உருவாக்கிய முகநூலில் மத வெறி பதிவு போட்டு முஸ்லீம் நாடு ஒன்றிலிருந்து வந்த பெட்ரோலில் இயங்கும் வாகனத்தில் புறப்பட்டுப் போனார் என்று பலரும் தக்க பதிலடியும் கொடுத்திருந்தனர்.

இது தொடர்பாக நான் மோடியிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்.

எங்கள் நாட்டுக்கு வந்து தொழில் தொடங்குங்கள் என்று ஜப்பானிலும் அமெரிக்காவிலும் போய் கூவி விட்டு வந்தீர்களே, அந்த அழைப்பு அந்த நாடுகளில் உள்ள இந்து முதலாளிகளுக்கு மட்டுமா? அங்கேயுள்ள புத்த மதத்தை, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த முதலாளிகளுக்குமா?

இந்திய  முஸ்லீம்கள் இந்தியாவிற்காக உயிரையும் கொடுப்பார்கள் (அதனால்தான் நீங்கள் குஜராத்திலும் முசாபர்நகரிலும் உயிரை எடுத்தீர்கள் என்பதுதான் யதார்த்தம்) என்று டயலாக் விட்டீர்களே? அந்த முஸ்லீம்களின் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று உங்கள் குருபீடம் சொல்கிறதே, இதற்கு அரசியல்சாசனப்படி பிரதமராக பதவிப்பிரமாணம் எடுத்த உங்கள் நடவடிக்கை என்ன?

சொல்வீர்களா? பதில் சொல்வீர்களா?

No comments:

Post a Comment