Sunday, June 15, 2014

இவரைத் தவிர வேற யாராவது சரிப்பட்டு வருவாங்களா?

நேற்று கடலூர் போயிருந்தேன். கடலூரிலிருந்து விழுப்புரம் வந்து
அங்கிருந்து தொடர் வண்டி மூலமாக வேலூர் வந்து சேர்ந்தேன்.

கூட்டமே இல்லாமல் படுத்துக் கொண்டு வந்தேன். பயண நேரம்
முழுதுமே பாடல்கள் கேட்டு வந்தேன். இனிமையான பாடல்கள்
பயணத்தை சுவையாக்கியது.

பல பாடல்கள் பல சிந்தனைகளையும் தூண்டியது. சன் டி.வி 
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வாரமாக அனுசரிப்பது 
போல இந்த வாரத்தை திரை இசை வாரமாக அனுசரிக்கலாமா
என்று யோசிக்கிறேன்.

முதலில் சிவந்த மண் படத்தின் பட்டத்து ராணி  பாடலை
பாருங்கள். 

இந்த பாடலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி தவிர வேறு யாரையாவது
நினைத்துப் பார்க்க முடிகிறதா?

என்ன குரல்.....
 

1 comment:

  1. பட்டத்து ராணி பாடலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியைத் தவிர வேறு யாரையும் நினைதது பார்க்க இயலாது நண்பரே
    நன்றி

    ReplyDelete