Saturday, June 28, 2014

ஒரிஜனலாய் ஒரு ரமணா வர வேண்டியதில்லை

 A view of the site where a multi-storeyed building collapsed at Moulivakkam, in Chennai on Saturday.

சென்னையில் தகர்ந்த கட்டிடம் அதிர்ச்சி அளிக்கிறது. 

விதிமுறைகள் என்பதே மீறப்படுவதாகவே  உருவாக்கப்படுகிறது
என்ற உணர்வை இது போன்ற விபத்துக்கள் உருவாக்குகிறது.

குறுகிய காலத்தில் மிக அதிகமான லாபத்தை சம்பாதிக்க வேண்டும்
என்ற வெறி உலகமயமாக்கல் கொள்கைகளின் விளைவு. அதற்கு
இசைந்து கொடுக்கும் அரசுகள் வர வேண்டும் என்பதே முதலாளித்துவத்தின் எதிர்பார்ப்பு. 

அதிகார வர்க்கமும் ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும்
வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாய் மாறி விட்டது. 

தவறிழைத்ததாய் சில அதிகாரிகள் தண்டிக்கப்படலாம். பலர்
தப்பித்து விடலாம்.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

ஒரு சில ரமணாக்கள் ஒரிஜனலாக தோன்றினாலும் இந்த
முதலாளித்துவ அமைப்பு முறை தொடர்கிறவரை எந்த ஒரு
மாற்றமும் ஏற்படாது.

அமைப்பில் மாற்றம் வரக்கூடாது என்று விரும்புகிற முதலாளிகள்
தங்களின் ஊடகங்கள் மூலமாக மன்மோகனுக்குப் பதில்
மோடி என்று மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இதுதான் வருத்தத்திற்குரிய இன்றைய யதார்த்தம்.  

1 comment:

  1. இந்தியாவுக்கு 100 கோடி மக்கள் தொகை தாங்காது. மக்கள் தொகை கட்டுப்பட வேண்டும். இதை அரசியல்வாதிகளால் செய்ய முடியாது. மக்கள் உணர வேண்டும்.

    ReplyDelete