Monday, June 23, 2014

எரிமலையை சுமந்த ராம நாராயணன்

 

இயக்குனர் ராம நாராயணன் மறைந்துள்ளார். அவருக்கு எனது
இதய அஞ்சலி.

மிருகங்களை வைத்து படமெடுத்தவர். அம்மன் படங்களாக
எடுத்தவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. அதில் உண்மையும்
உண்டு.

ஆனாலும் எனக்கு அவரை பிடிக்கும்.

பிரம்மாண்டமான பட்ஜெட் என்றெல்லாம் தயாரிப்பாளரின்
பணத்தில் பொங்கல் வைக்காதவர்.

நட்சத்திரக் கதாநாயகர்களின் பின் அலையாதவர். 

இரண்டு மூன்று கதாநாயகர்களை வைத்து அதிகமாக தமிழில்
படமெடுத்தவர் அவராகத்தான் இருக்கும்.

அவரது துவக்க காலப் படமான "சுமை" எனக்கு மிகவும்
பிடிக்கும். பொறுப்பற்ற தகப்பன் ஏழெட்டு பிள்ளைகளை
பெற்றுப் போட்டதால் குடும்பப் பாரத்தை சுமக்கும் மூத்த
மகனாக சந்திரசேகர் நன்றாக நடித்திருப்பார். படமும்
நன்றாக இருக்கும். ஆனால் ராம நாராயணன் திசை மாறிப்
போய் விட்டார்.

தமிழக உழைப்பாளி மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு
சிவப்பு மல்லியில் வரும் எரிமலை எப்படி பொறுக்கும்? 
பாடல். நாடி நரம்புகளை சூடேறச் செய்யும் இப்பாடல்
இல்லாமல் அநேக இடங்களில் மேதினம் அனுசரிக்கப்
படுவதேயில்லை.

ராம நாராயணனுக்கு எனது இதய அஞ்சலி. 

2 comments:

  1. அழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  2. என்னவோ போங்க தோழர், எரிமலை எப்படி பொறுக்கும்? -ங்கற வரிய கேட்டா உங்களுக்கு நாடி நரம்புகளை சூடேறுது. ஆனா இந்தக்கால பசங்களுக்கு கெக்கே பிக்கே ன்னு சிரிப்புதான் வருதாம்.

    http://youtu.be/pIsc2O42ob0?t=1m22s
    வேணும்னா இந்த லிங்க பாருங்க சிரிப்பாத்தானே வருது?

    ReplyDelete