வேலூர்
மக்கான் சந்திப்பில் ஒரு எலக்ட்ரானிக்
போர்ட் உள்ளது. அதில் நாள், நேரம் இதையெல்லாம் மட்டுமல்லாமல் வெப்ப
அளவையும் கூட பார்க்கலாம். குரங்கை நினைத்துக் கொண்டு மருந்தை சாப்பிடாதே என்ற
வைத்தியரின் அறிவுரையை நோயாளிகளால் எப்படி பின்பற்ற முடியாதோ அது போலவே
அந்தப்பக்கம் செல்லும் போது அந்த போர்டை பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும்
முடிவதில்லை.
103 டிகிரி பாரன்ஹீட், 104 டிகிரி பாரன்ஹீட் என்று பார்க்கும்போது சூரியன் நேரடியாக தலை
மீது அமர்ந்து கொண்டது போல த்ரிகிறது. வெப்ப அளவைப் பார்க்கும் போதே எல்லா
உற்சாகமும் வடிந்து ஒரு வித சுய பரிதாபமும் ஏற்பட்டு விடுகிறது.
இந்த போர்ட்
இல்லாவிட்டால் வெயில் தாங்கவில்லை என்று பொதுவாக பேசுவோமே தவிர அளவெல்லாம் மறுநாள்
பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். இன்ஸ்டன்டாக சோர்வையும் மலைப்பையும்
அந்த போர்ட் உருவாக்கி விடுகிறது
ம்ம்ம்ம்ம்,
மத்த ஊர் ஆசாமிங்களாம் கொடுத்து வைச்ச மகராசனுங்க.
No comments:
Post a Comment