நேற்று உலக இசை தினம் என்று நேற்றைய தீக்கதிரை இன்று
படித்து அறிந்து கொண்டேன். எனக்கு பிடித்த பாடகர்களின்
சிறந்த பாடல் என்று நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன்.
எனக்கு பிடித்த பாடல்கள்தான். ஆகவே இதிலே நம்பிக்கை
அளிக்கும் நட்சத்திரங்கள், இளம், கிழம் என்றெல்லாம் எந்த
ஒரு சர்ச்சைக்கும் இடமில்லை.
ஐந்து ஆண் பாடகர்கள், ஐந்து பெண் பாடகர்கள் - இதிலே
எனக்கு பிடித்த ஒரு பாடல். ஆனால் இந்த பட்டியல் தயாரிப்பதே
சிரமமாகி விட்டது.
சரி இப்போது பட்டியலுக்குள் செல்வோம்.
இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம்
இன்னும் காற்றில் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பி.சுசீலா அவர்கள் நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
என்று சொன்னாலும் கேட்க மறுத்து பாடலை முழுதாகக்
கேட்பேன் என அடம் பிடிக்கிறது நிலா.
என் மன்னன் எங்கே என்று எஸ்.ஜானகி கேட்ட கேள்விக்கு
செந்தூரப் பூ பதில் சொல்லவே இல்லை.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்று தொடங்கி
தத்துவங்களை இசையாய் பொழிகிறார் வாணி ஜெயராம்.
பாடறியேன், படிப்பறியேன் என்று அப்பாவியாய் பாடத்
துவங்கும் சித்ரா, தன்னுடைய இசையறிவை நிரூபிக்கிறார்.
இனி ஆண்கள் பக்கம் வருவோம்.
பால முரளி கிருஷ்ணாவின் குரலைக் கேட்டு மகிழ்ந்திட
நமக்கு ஒரு நாள் போதுமா?
பி.பி.ஸ்ரீனிவாஸ் போல நாமும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
என்று பாடினால் வந்த கோபமும் மறைந்திடுமல்லவா?
யார் அந்த நிலவு என்று டி.எம்.சௌந்தரராஜன் தேடுகிறாரே,
கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.
அவரோகணம் இன்றி கே.ஜே.யேசுதாஸ் கலைவாணியே உனைத்தானே
என்று அழைத்த போது உள்ளம் உருகி உள்ளேன் ஐயா என்று
வந்தவர்கள் எத்தனை பேர்.
இளைய நிலா பொழிகிறது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியன்
பாடுகையில் இசையல்லவா பொழிகிறது!
என்னங்க, இந்த டாப் டென் பட்டியல் சரியா?

exactly my list
ReplyDeleteexactly my list of favorite singers.I have one more female and two more male singer in the list.S.P.Shailaja ,P.Jayachandran and Malaysia Vasudevan.
ReplyDeleteMr Sarath Chandran,they are also my favourites. Even jency. Since I restricted with Ten, I could not add
ReplyDelete