கலைஞரின் மகன் மு.க.முத்து நடித்த திரைப்படங்கள் எதையும்
நான் பார்த்ததில்லை. சில தினங்கள் முன்பாக ஏதோ ஒரு சேனலில்
அவரது முத்துப்பல் சிரிப்பென்னவோ என்ற பாடலைப் பார்த்தேன்.
அந்த ஒரு பாடலை வைத்து மட்டும் எந்த ஒரு முடிவிற்கும் வரக்
கூடாது என்று யுடியூபில் தேடிய போது காதலின் பொன்வீதியில்
என்ற பாடலும் மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ என்ற
பாடலும் கிடைத்தது.
எம்.ஜி.ஆரில் முக்கால் பங்கும் சிவாஜியில் கால் பங்கும்
சேர்ந்த கலவையாகத்தான் மு.க.முத்து இருக்கிறார். நடை, நடனம்,
முகபாவம் எல்லாவற்றிலும் தனித்துவம் என்று எதையும்
காண்பிக்க முயற்சி செய்யாமல் பெரும்பாலும் இமிடேட்டே
செய்திருக்கிறார்.
இதில் பாடல் வரிகளில் வேறு ஏராளமான பில்ட் அப்.
அதனால் கூட எம்.ஜி.ஆர் கடுப்பாகி இருக்கலாம்.
எம்.ஜி.ஆர், சிவாஜியின் நகலைப் பார்ப்பதற்கு அவர்கள்
படத்தையே பார்த்திருக்கலாம் என்று ரசிகர்களும் முடிவு
கட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எது எப்படியோ எம்.எஸ்.வி யின் இசையில் அந்த மூன்று
பாடல்களுமே சூப்பர்.
மெண்டல்
ReplyDeleteயார் மெண்டல் அனானி? இந்த பதிவிற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கமெண்ட் போட்டிருக்கிற நீதானே?
ReplyDeleteஉங்கள் கணிப்பு மிகச் சரி. நான் இவர் படங்களை அந்த இனிய பாடல்களுக்காகப் பார்த்தேன்.கலைஞர் இவரை எம் ஜி ஆருக்குப் போட்டியாகக் களமிறக்கினார் என்பது உலகறிந்த உண்மை.
ReplyDeleteமக்களும், ரசிகர்களும் ஏன் எம்ஜிஆரை விரும்பினார்கள் என்பதனைச் சரியாக உணராமல் உருவாக்கப்பட்டவர் இவர். எடுபடாமல் போனது நன்மையே!
கருணாநிதி சர்காரியா கமிசனில் சிக்கிய நேரமென நினைக்கிறேன். இவர் "பிள்ளையோ பிள்ளை" வெளிவந்தது. அப்போ "பிரபலமான வாசகம்"- மகன் நடிப்பது "பிள்ளையோ பிள்ளை"- அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை.அந்தக் கொள்ளை 2ஜி வரை தொடர்ந்துள்ளது.