Saturday, June 21, 2014

மீண்டு, மீண்டும் வந்த "என்னடி மீனாட்சி"

நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

என்னைப் போன்ற வயதானவர்களுக்கு நிச்சயம் நினைவில்
இருக்கும் என்று நம்புகிறேன்.

எழுபதுகளின் இறுதியில் ரேடியோ சிலோனில் இசைச்செல்வம்
என்று ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம்
மூன்று மணி முதல் நான்கு மணி வரை நடைபெறும். கே.எஸ்.ராஜாவா,
இல்லை அப்துல் ஹமீதா , யார் தொகுத்து வழங்கினார் என்பது
நினைவில் இல்லை.

இன்றைய டாப் டென் பாடல்கள் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி
அந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு வாரமும் பதினொன்று  பாடல்களை ஒலிபரப்புவார்கள்.
போன வார பாட்டு பத்து, புதிய அறிமுகம் ஒன்று.  நேயர்கள் அனுப்பும்
தபால் அட்டையின் அடிப்படையில் தர வரிசை போட்டு ஒலி பரப்புவார்கள்.

இந்நிகழ்ச்சியில் வெகு காலம் முதலிடத்தில் இருந்த பாடல்தான்
என்னடி மீனாட்சி. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புதிய பாடல்கள் 
வர, அதன் தர வரிசை குறைந்து கொண்டே போய் பத்தாவது இடத்திற்கு
வந்து சேர்ந்தது.

அடுத்த வாரம் வெளியேறிவிடும் என்ற நிலையில் திருச்சியிலிருந்து
ஒரு ரசிகர் 2000 க்கு மேற்பட்ட தபாலட்டைகளை அனுப்ப என்னடி
மீனாட்சி மீண்டும் முதலிடத்திற்கே வந்து விட்டது. அதன் பின்பு
மூன்று மாதங்களுக்கு மேல் அந்த இடத்திலே இருந்தது என்பது
வரலாறு

3 comments:

  1. அருமையான பாடல்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. சிறு வயதில் நான் மிகவும் ரசித்த பாடல். வீதியோரங்களில் நின்று கேட்ட அனுபவங்கள் கூட உண்டு. நீங்கள் சொல்லியிருப்பது நானறியாத தகவல். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. இந்த நிகழ்ச்சி கேட்டதில்லை! ஆனால் பாடலை ரசித்து இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete