Saturday, June 7, 2014

நாஞ்சில் நாடன் பட்டியலும் எதிர் வினைகளும் - அறிவுபூர்வமான சர்ச்சை

ஆனந்த விகடனில் நாஞ்சில் நாடன் வெளியிட்ட பட்டியல்
இலக்கிய உலகில் பரபரப்பான சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முகநூலில் என் கண்ணில் பட்ட சில எதிர்வினைகள் கீழே.

அவை அர்த்தமிக்கதாகவும் அறிவுபூர்வமாகவும் உள்ளது
பாராட்டத்தக்கது.

குட்டி ரேவதி
 
நாஞ்சில் நாடன் - நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் அல்ல!

தமிழின் உன்னதப்படைப்பான 'எரியும் பனிக்காடு' நாவலை இயக்குநர் பாலாவுடன் சேர்ந்து சின்னாபின்னப்படுத்தியவர். டேனியல் என்ற மாபெரும் கலைஞனை ஒரு நகைச்சுவைப்பாத்திரமாக்கி இதைவிட அதிகமாய்க் கேவலப்படுத்தமுடியாது.

'எரியும் பனிக்காடு', ஏற்கெனவே ஒரு திரைப்படக்கதை போலவே அது எழுதப்பட்டிருக்கிறது. அதில் செய்யவேண்டியது வேறெதுவுமில்லை.

'பரதேசி' படத்தில், எரியும் பனிக்காட்டில் இல்லாத மதவிடயங்களைப் புகுத்தி, அதை இந்துத்துவச் சார்புடையது ஆக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகச் சித்திரித்திருந்தார்.

ஒரு மாபெரும் கலைப்படைப்பை, இவ்வாறு சிதைக்க ஒரு நல்ல எழுத்தாளனால் எப்படி முடியும்?

அறம் தொலைத்த எழுத்தாளனால் மட்டுமே இது இயலும்.

அவரே 'நம்பிக்கைக்குரிய' எழுத்தாளராக இல்லாத நிலையில், 'நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்' பட்டியலுடன் வந்திருக்கிறார்.

அதீத நகைச்சுவைக்குரியது. கண்டனத்திற்குரியது.

தமிழ் நவீன இலக்கியத்தின் கதை, கவிதை, கருத்தியல் தளங்களில் தற்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டுமானச் சலனத்தையும் படைப்பாற்றல் வீச்சையும் நவீனத்தையும் கண்டுணர இயலாத அல்லது புறக்கணிக்கும் பழமை மனப்போக்குப் படிந்த அவரது பட்டியலைப் புறக்கணிப்பதே,

இலக்கியத்தின் வழி சமூகநீதி, அறம், மானுடம், மனித வாழ்வின் சுக துக்கங்கள், அகம், புறம் பேசும் எவரும் ஆற்றும் சரியான செயலாக இருக்கமுடியும்!



மனுஷ்ய புத்திரன்
 
 இளம் தமிழ் எழுத்தாளர்களில் டாப் 10 அவநம்பிக்கை நட்சத்திரங்கள்:
மனுஷ்ய புத்திரனின் பட்டியல்
................................................
1. நெல்சன் சேவியர்
2. யுவ கிருஷ்ணா
3. விநாயக முருகன்
4. அராத்து
5. அதிஷா
6. கவின் மலர்
7. கே.என்.சிவராமன்
8. ஆத்மார்த்தி
9. டான் அசோக்
10. செல்லமுத்து குப்பு சாமி


யுவ கிருஷ்ணா

 இளம் எழுத்தாளர்களில் டாப் டென் நம்பிக்கை நட்சத்திரங்களாக கீழ்க்கண்டோரை பெருமையோடு அறிவிக்கிறேன்.

1) மனுஷ்யபுத்திரன்
2) சாருநிவேதிதா
3) ஜெயமோகன்
4) எஸ்.ராமகிருஷ்ணன்
5) ஜெயகாந்தன்
6) அசோகமித்திரன்
7) இந்திரா பார்த்தசாரதி
8) கலைஞர் கருணாநிதி
9) கவிப்பேரரசு வைரமுத்து
10) புரட்சித்தலைவி ஜெயலலிதா


வினாயக முருகன்

 உலகத்தின் வேறு எந்த மொழிகளிலும் இல்லாத ஒரு கூத்து தமிழில் மட்டுமே நடக்கும். அதாவது தமிழில் எழுதுபவர்கள்தான் தொடர்ந்து கருத்துகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். தங்களுக்கு வாசகர் வட்டம் என்று உருவாக்குவார்கள். எனக்கு பிறகு இவர்கள்தான் எனது எழுத்துலக வாரிசுகள் என்று சிலரை நியமித்து விட்டு இறந்து போவார்கள்

 இது நாஞ்சில் நாடன் விஷயத்துக்கு எழுதிய பதிவு. ஆனால் இது எல்லா மூத்த எழுத்தாளர்களுக்கும் பொருந்தி போவதில் எனது குற்றம் எதுவும் இல்லை

ஆத்மார்த்தி
 
 நாஞ்சில் நாடன் ஆனந்த விகடனில் தன் நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அது தொடர்பாக இணையத்தில் பலரும் பல தொடர்பதிவுகளை நேர்த்தி வருகிறார்கள்.
முதலில் இது போன்ற பட்டியலை வெளியிடுவது பெரும் அபத்தமாகக் கருதுகிறேன்.


அதென்ன நம்பிக்கை தரும் பட்டியல்..?நாஞ்சில் நாடனுக்கு நம்பிக்கை அளிக்காதவர்களா மற்ற எழுத்தாளர்கள்..?எழுத்தாளர்களில் இளம் கிழம் என்று பகுப்பதே எரிச்சல் தருகிறது.ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஒரு செம்மொழியில் எழுதிக்கொண்டிருக்கும் யாருடைய ஆயுட்காலமும் 100ஆண்டுகளைத் தாண்டியதில்லை.கம்பர் எந்த வகை எழுத்தாளர்..?ஒட்டக்கூத்தரும் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் அசோசியேஷன் மெம்பர்களா அல்லது இல்லையா..?
நாஞ்சில் நாடன் பட்டியல் என்பது அவருடைய விருப்பம் அவருக்கு வாசிக்க வாய்த்த படைப்புகளின் வாயிலாக மட்டுமே தயாரிக்கப்பட்டதாக இருக்க முடியும்.தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் எல்லா இளம் படைப்பாளிகளின் எல்லா நூல்களையும் குறைந்த பட்சம் ஒவ்வொருவரின் ஒவ்வொரு படைப்பையாவது அவர் வாசித்திருப்பாரா,,?


நடக்காத பரீட்சையில் ரேங்க் பட்டியல் வழங்குவது அராஜகம் அல்லவா..?ஒரு பேச்சுக்கு என்னையே உதாரணமாகக் கொண்டு இதனை பகிர்கிறேன்.நான் எழுதிய 5 நூல்கள் மற்றும் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அனைத்தையும் படித்திருப்பாரா.,.நாஞ்சிலார்..?அட்லீஸ்ட் என்னை அவருக்குத் தெரியுமா என்பதே கேள்விக்குறி.

அபத்தமாக இருக்கிறது.நம்பிக்கை தரும் என்ற வார்த்தைக்கு பதிலாகத் தனக்குப் பிடித்தமான தனக்கு இணக்கமான தனக்கு விருப்பமான என்பன போன்ற வார்த்தைகளைத் தான் அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஒரு உதாரணத்துக்கு மெசியாவின் மூன்று மச்சங்கள் என்னும் அற்புதமான தொகுப்பை எழுதி சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற கதிர்பாரதி என்னும் கவிஞன் நாஞ்சிலார் பட்டியல் வெளியிட்டு இருக்கும் அதே ஆனந்தவிகடனில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார்.அவர் நாஞ்சிலாரின் நினைவுக்கு வராமற்போனதும் அப்பட்டியலில் விடுபட்டதும் வருத்தமளிக்காமல் வேறென்ன செய்யும்..?


தூப்புக்காரி என்றொரு படைப்பை உன்னதமாய்ப் படைத்து வலியை வலியாகவே மொழியில் பெயர்த்த மலர்வதியின் பெயர் இல்லாத பட்டியலை எப்படி முழுமையான ஒன்றாகக் கருதமுடியும்..?
சமீபத்தில் எழுத்தில் தீவிரமாய் இயங்கத் தொடங்கியிருக்கிற போகன் சங்கரை எப்படி விட்டுவிட முடியும்..?


ஃப்ரான்சிஸ் கிருபாவையும் பாம்பாட்டிச்சித்தனையும் நக்கீரனையும் சுஜாதா செல்வராஜையும் மனுஷிபாரதியையும் ஸ்ரீதர் பாரதியையும் நேசமித்ரனையும் செல்மா ப்ரியதர்ஷனையும் முகுந்த் நாகராஜனையும் விட்டு விட்டு எப்படிக் கவிதைக்கான நம்பிக்கையை வெளிச்சொல்ல முடியும்..?


முழுமையான பட்டியல் என்று நான் எங்கேயும் சொல்லவில்லையே வகைமாதிரிக்காக சிலரை என்ற வாக்கியத்தைத் தானே பயன்படுத்தி இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடும்.என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை விடவும் என்ன தொனிக்கிறது என்பதே முக்கியம் அல்லவா..?


உங்கள் பட்டியலில் எந்த ஆட்சேபமும் இல்லை.ஆனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைப் புதிய மற்ற இளையவர்கள் மீது திணிக்காதீர்கள்.யானை தும்பிக்கையால் தலை வருடி ஆசீர்வதிக்கலாம்.ஆசானே....தன் கால்களால் அல்ல.
உங்களுக்கா புரியாது..?நாஞ்சிலாரே..?


அஜயன் பாலா

 20 வருடமாக எழுதி ஒரிடத்தை வந்தடையும் எழுத்தாளர்களை நம்பிக்கையூட்டும் படைப்பாளி என பட்டியலிடுவது அவரது இதுநாள் வரையிலான படைப்புகளை அவமானப்படுத்துவது ஆகும் நாஞ்சில் நாடன் மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது அவரும் இந்த சீழ் பிடித்தப்பட்டியல் போடும் காரியத்தை செய்திருக்க வேண்டாம். 

குட்டிரெவதி அ,. வெண்ணிலா வாமு கோமு சுகிர்தராணி போன்ற்வர்கள் தனித்த அடையாளத்தை பெற்றவர்கள் . அவர்களை நம்பிக்கையூட்டும் படைப்பாளிகள் லிஸ்டில் சேர்த்திருப்பது அவர்களது அடையாளங்களை மழுங்கடிக்கவே செய்யும் . 

அவர் எனக்கு பிடித்த படிப்பாளர்கள் என பொதுவாக பட்டியலிட்டால் கேள்வியே இல்லை.. மேலும் சந்திரா லஷ்மி சரவணகுமார் இசை இளங்கோ போன்ற்வர்களும் நம்பிக்கையை கடந்த படைப்பாளிகளே..மேலும் ஒரு சிறந்த கவிதை எழுதியவன் அவன் எத்த்னை வயதினன்னாக இருந்தாலும் அவன் முழுமையான படைப்பாளனே ... ராம்கிருஷ்ணன் ஜெயமோகன் ஆகீயோர் தங்களது சுய இலக்கியல் அரசியலுக்காக இந்த கீழ்த்தரமான் கயமை கூடிய காரியத்தை அடிக்கடி செய்து அதிகார்மாக மாற்றுவார்கள். தங்களை விமர்சிக்கும் படைபாளியை கொச்சை படுத்த பொதுவெளியில் அவர்கள் பயன் படுத்தும் தந்திரமான தருணம் இது. . 

கால்ம் இது பொன்ற கயமைகளை காரிதுப்பும். வண்டி வண்டியாக எழுதி இடத்தை அடைக்கலாம் . இணையத்தில் அடிக்கடி பேச வைக்கலாம் . அத்த்னையும் குப்பையில் மலம் அள்ளுவதைபோல கயமை நிரம்பியவர்களின் படைப்புகளை காலம் அள்ளி தூர வீசும்,, நாஞ்சில் இதை அறிந்து செய்திருக்கமாட்டர் ஆனாலும் இது போன்ற காரியங்களை அவர் இனி செய்ய மாட்டார் என நினைக்கிறேன்

1 comment:

  1. ஓவ்வொருவருக்கும் ஒருவரை பிடிக்கும்! இதைப்படித்த போது அனாவசிய சர்ச்சையாகவே தோன்றியது!

    ReplyDelete