Tuesday, April 9, 2024

அமெரிக்க வழியில் இந்தியா சரிகிறது . . .

 


2010 களில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடி, அது பின்னர் உருவாக்கிய உலகப் பொருளாதார நெருக்கடி எல்லாம் நினைவில் உள்ளதா? தகுதிக்கு மீறி கடன் கொடுத்ததால் திவாலாகிப் போன அமெரிக்க வங்கிகள், யாரும் குடியேறாத வீடுகள் இவை எல்லாம் நினைவில் உள்ளதா? வாராக்கடன்களையே பத்திரமாக்கி ஊக வணிகத்தில் உலவ விட்டு நாசமாகிப் போனதெல்லாம் நினைவில் உள்ளதா? பெயில் அவுட் என்ற பெயரில் பாரக் ஒபாமா, அமெரிக்க கஜானாவை திறந்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாத்ததும் நினைவில் உள்ளதா?

நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவும் அதே வழியில் செல்கிறது. ஆங்கில இந்து நாளிதழின் தலைப்புச் செய்தி கொடுக்கும் அதிர்ச்சிச் செய்தி இது.

இந்தியாவின் வீட்டுச் சேமிப்புக்கள்(DOMESTIC SAVINGS) ஒட்டு மொத்த உற்பத்தியில் 5 % மட்டுமே என்ற அளவில் சுருங்கியுள்ள போது, வீட்டுக் கடன் கள் (DOMESTIC DEBTS) என்பதோ ஒட்டு மொத்த உற்பத்தியில் 40 % ஆக இருக்கிறது.

சேமிப்பு குறைவதும் கடன் அதிகரிப்பதும் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல.

வீட்டு வசதிக் கடன் வாங்குவதால்தான் இந்நிலை என்று அரசு சால்ஜாப்பு சொல்கிறது. திருப்பி செலுத்தும் சக்தியை உரிய முறையில் ஆய்வு செய்து கடன் கொடுக்கப்படுகிறதா அல்லது கடன் கொடுக்கும் இலக்கை பூர்த்தி செய்வதற்காக கடன் கொடுக்கப்படுகிறதா?

வங்கிகளின் இலக்கு இப்போது டெபாசிட் சேகரிப்பது என்பதிலிருந்து கடன் கொடுப்பது என்று மாறி விட்டது. 

ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன் அதிகமாகிக் கொண்டேவுள்ள சூழலில் சாமானிய மக்கள் வாங்கிய கடனும் வாராக்கடனாக மாறினால் என்ன ஆகும்?

முந்தைய பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காத காரணம் பொதுத்துறை வங்கிகள். இன்று அவற்றை மோடி பலவீனமாக்கி விட்டார். நுகர்வுக் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. வரி விதிப்பு முறைகளில் செய்யப்படும் மாற்றம் சேமிப்பை பின்னுக்குத் தள்ளுகிறது.

மோடி ஆட்சி தொடர்ந்தால் நிலைமை கேவலமாகும். செல்லா நோட்டு, ஜி.எஸ்.டி, கொரோனா கால அவலங்களை விட இன்னும் மோசமாகும்.

எனவே நிராகரிப்பீர் மோடியை.

அதுவும் இன்று சென்னை வருகிறாராம்.

அதனால் #GoBackModi

No comments:

Post a Comment