மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு பதிவை நேற்று பார்த்தேன். வதந்திகளை பரப்பும் ஒரு வன்ம சங்கியின் பதிவு அது.
மின்னழுத்த மோட்டார் போன்றவற்றால் தண்ணீர் பீய்ச்சும் போது பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களை குறி வைத்து சிலர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதால் அதனை முறைப்படுத்த வேண்டும் என்று ஒருவர் மதுரை பெஞ்சில் வழக்கு பதிவு செய்ய, அதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் விளைவுதான் முன் பதிவு . . .
தீர்ப்பளித்தவர் யார் தெரியுமா?
நீதிபதியான பிறகும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி நிகழ்வுகளில் கலந்து கொள்கிற திரு ஜி.ஆர்.சுவாமிநாதன்.
இத்தகவலை ஒருவர் பகிர்ந்ததும் பெரும்பாலான சங்கிகள் அந்தப் பக்கம் வராமலே பதுங்கி விட்டனர்.
ஆனாலும் ஒரு மூத்த சங்கி தாமரையை மலர வைக்க ஒரு பின்னூட்டம் போட, நான் எதிர்வினையாற்ற, ஒரு கட்டத்தில் கண்ணீர் எமோஜி போட்டு விட்டு பதுங்கி விட்டார்.
பாவம் சங்கிகள், சந்திரசூட்டால் பிரச்சினை வந்தால் கலகம் செய்யலாம். அவர்கள் ஆள் என்றால் என்ன செய்வார்கள்? யூ டூ ப்ரூட்டஸ் என்று வெளிப்படையாகவும் சொல்ல முடியாது.. ரியலி பாவம் . . .
No comments:
Post a Comment