நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள், உரிமைத் தொகை வாங்கும் பெண்களை இழிவு படுத்தி பேசியதுதான் நேற்றைய ட்ரென்டிங் செய்தி.
இந்த ஆண்டு வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது. அந்த பெண்மணி சொன்னது ஒன்றும் அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அளிக்கவில்லை.
கூட்டம் அதிகமாக இருந்ததால் நினைவகத்திற்குள் கொஞ்சம் கொஞ்சம் பேராகத்தான் அனுப்பினார்கள். காம்பவுண்ட் கேட் அருகில் நிற்கையில் எங்கள் கோட்டத்தில் பணியில் சேர்ந்து இப்போது திருத்துறைப்பூண்டியில் பணி செய்யும் தோழர் காந்தி "வெண்மணி தியாகிகளுக்கு, இன்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பினிலே வீர வணக்கம்" என்று முழக்கமிட நாங்கள் திருப்பி முழக்கமிட்டுக் கொண்டிருந்தோம்.
அவர் சற்று ஓய்ந்த நேரத்தில் "நாம் தமிழர் கட்சி சார்பில் வீர வணக்கம்" என்ற முழக்கம் கேட்டது. ஒரு பத்து வாலிபர்களும் ஒரு பெண்மணியும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த பெண்மணி கோஷம் எழுப்பிய வாலிபனின் காதில் ஏதோ சொல்ல அவர்கள் முழக்கங்கள் மாறியது.
"பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள், சீமானின் தம்பிகள், நாம் தமிழர் கட்சி வாழிய வாழியவே" என்று கூவ ஆரம்பித்து விட்டார்கள். தியாகிகள் மண்ணில் சீமான் புகழை பாடுவதை கூவல் என்றுதானே சொல்ல முடியும்.
யாருங்க அந்த பெண்மணி என்று எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதத்தை கேட்ட போது "அவங்களை தெரியாதா? அவங்கதான் காளியம்மா" என்று கேட்டார். வெண்மணி மண்ணுக்கு பொருத்தமில்லாத கோஷங்களை எழுப்பச் சொன்ன பெண்மணி அநாகரீகமாக பேசியதில் வியப்பென்ன உள்ளது!
யார் அவ்ங்க என்று கேட்டது அந்த பெண்மணிக்கு தெரிந்திருந்தால் "என்னை தெரியலைன்னு இவன் சொல்லிட்டான் என்று வடிவேலை அடிக்கும் சிங்கமுத்து" போல என்னை ஏதாவது செய்திருப்பார்களோ?
No comments:
Post a Comment