Monday, April 15, 2024

நீயெல்லாம் பேசலாமா ஆட்டுக்காரா?

 எழுத்தாளரும் வழக்கறிஞமுரான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆட்டுக்காரனை பேச விடாமல் செய்யும் பதிவு இது.




பிஜேபி கட்சி கோவையில் செய்து வரும் மிகப் பெரிய காமெடி கோவைக்கு வளர்ச்சியை கொண்டு வருவோம் என்பதும், ஊழலை ஒழிப்போம் என்பதும்.

நன்றாக வளர்ந்து கொண்டிருந்த கோவையை நாசமாக்கியது மதக் கலவரங்கள். பல்லாயிரம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். கோவை தேங்கிப் போனது. இப்போதும் gst, செல்லாத பணம் போன்றவை குப்புரத் தள்ளியவை. பெட்ரோல், டீசல் விலை ஏறியதுதான் கோவை ஆலைகள் பங்களா தேஷ் போன்ற நாடுகளுடனான போட்டியில் பிந்தங்க காரணம். பிஜேபி வளர்ச்சி பற்றி பேசலாமா?
அண்ணாமலை நெடுங்குன்றம் சூரியா போன்ற பல கொலை வழக்குகளில் தொடர்பு உடையவர் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். சூர்யா போன்ற குற்றப் பின்னணி கொண்ட பலர் பிஜேபியில் அண்ணாமலை தலைவராக இருக்கும் போது சேர்க்கப் பட்டு உள்ளார்கள். சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் ஆகியோர் மீது ஆந்திராவில் ஊழல் வழக்குகள் உள்ளன. நர லோகேஷை அழைத்து வந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார். ரபேல் வாட்ச், மாதம் செலவுக்கு நண்பர்களிடம் எட்டு லட்ச ரூபாய் வசூல் என்று பலதும் இருக்கின்றன.
யார் எதைப் பற்றிப் பேசுவது என்று வேண்டாமா?

No comments:

Post a Comment