கடந்த வருடம் ஆந்திராவில் நடைபெற்ற கொடுமையான விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மூன்று வண்டிகள் மோதியதால் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட முப்பது பேர் இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான ஒரு டிரெயினின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் இருவரும் அலைபேசியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் விபந்து நடந்ததாக ரயில்வே மந்திரி அஸ்வினி எழவு பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியுள்ளார்.
இன்று வந்த செய்தியின்படி அந்த இருவரின் தொலைபேசிகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய போது அவர்கள் தொலைபேசிகளை பேசக்கூட பயன்படுத்தவில்லை, இணையத்தை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விபத்திற்கு இவர்கள் காரணமில்லை என்பது தெளிவாகிவிட்டது என்று ரயில்வே உயிரதிகாரிகள் சொல்லி விட்டனர்.
மோடி பெரிதாக பீற்றிக் கொண்ட "கவச்" எனும் பாதுகாப்பு ஏற்பாடு விபத்துக்குள்ளான எந்த டிரெயினிலும் பொருத்தப்படவில்லை, சிக்னல் கோளாறுகளை சரி செய்ய வேண்டும், அதற்கு நிதி வேண்டும் என்பதை புறக்கணித்து மோடி வந்தே பாரத்திற்கு பச்சைக்கொடி காட்டவும் மரண தூதன் மோடியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் அமைக்க ஊதாரித்தனமாக கோடிக்கணக்கில் செலவழித்தது ரயில்வே துறை. மோடியைப் போலவேதான் எல்லா மந்திரிகளும் கேவலமானவர்களாகவே இருக்கிறார்கள்.
அதன் கையாலாகத, நிர்வாகம் நடத்த அருகதையற்ற கேவலத்தை மறைக்க, பதில் சொல்ல வாய்ப்பில்லாத இறந்து போன ஓட்டுனர்கள் மீது பழி போட்டார் ரயில்வே மந்திரி. இதில் இந்தாளு மிகப் பெரிய மேதைன்னு வேற சங்கிங்க பீற்றிக் கொண்டார்கள்.
உன் தவறை மறைக்க இறந்தவர்கள் மீது களங்கம் சுமத்திய கேடு கெட்ட, கேவலமான ரயில்வே மந்திரியே, நீ செய்த அவதூறுக்கு பகிரங்க மன்னிப்பு கேள்.
No comments:
Post a Comment