அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்பது சினிமா டயலாக்.
அசிங்கப்பட்டான் ஆட்டுக்காரன் என்பது நிஜம், யதார்த்தம்.
ஆமாம். வாக்குகள் அகற்றப்பட்டது என்று ஆட்டுக்காரன் கட்டி விட்ட கதைக்கு ஒரு பில்ட் அப் கொடுக்க வாக்குகள் அகற்றப்பட்டவர்கள் என்ற போர்வையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
அதில் காமெடி என்னவென்றால் அத்தனை பேர் கையிலும் ஓட்டு போட்ட மை இருக்கிறது.
ஒரு தாத்தா பாட்டி இருக்கிறார்கள். ஒரு போலியான போராட்டத்தில் கடுமையான வெயில் காலத்திலும் கலந்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு மோசமான சங்கிகளாக இருக்க வேண்டும்.
உண்மையில் பெரிய காமெடி எது தெரியுமா?
"நான் உயிரோடு இருக்கிறேன், என் வோட்டு எங்கே?" என்ற அட்டையை பிடித்து நிற்பவர் கையிலும் மை இருப்பதுதான்.
கவுண்டமணி பாணியில்
"இப்படியெல்லாம் பொய் பேசி அசிங்கப்பட்டுக்கிட்டு நீயெல்லாம் எதுக்குடா உயிரோட இருக்கே?"
இந்த கவுண்டமணி கேள்வி ஆட்டுக்காரனுக்கும் பொருந்துமல்லவா?
No comments:
Post a Comment