இது நடந்தது கோவையில் . . .
நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த டப்பாக்களில் அந்த ஹோட்டலின் விளம்பரம் அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு கட்டணம் வசூலிப்பது நியாயமா என்பது வழக்கு.
பேக்கிங் செய்யும் டப்பாக்களில் ஹோட்டலின் பெயரையும் போட்டு அதற்கு பணமும் வாங்குவது தவறு என்று சொல்லி பத்தாயிரம் ரூபாய் அபராதமும் போடப்பட்டுள்ளது.
எனவே ஹோட்டலில் பார்சல் வாங்கும் போது சாம்பார் டப்பாவில் ஹோட்டல் பெயர் இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி பெயர் இருந்து அதற்காக கட்டணமும் வசூலிக்கப்பட்டால் நீங்களும் கன்ஸ்யூமர் கோர்ட்டிற்கு செல்லலாம்.
பிகு: சமூக ஊடகங்களில் கூட தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாதாமே. மீறினால் இரண்டாண்டு சிறையாம். அப்படியெல்லாம் தடை விதித்தால் வேறு வழியில்லாமல் இப்படித்தான் மொக்கைப் பதிவுகளாக எழுத வேண்டியிருக்கலாம். . .
No comments:
Post a Comment