Tuesday, April 16, 2024

மதுரை வாக்காளர்களே செய்வீர்களா?

 


மதுரையில் பாஜக வேட்பாளராக தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் ராம.சீனு பேசும் காணொலி ஒன்றை பார்த்து மிகவும் கடுப்பாகி விட்டேன்.

கம்யூனிஸ்டுகள் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் கடைசி ஆணியை அந்த ஜந்து மதுரையில் அடிக்கப் போகிறதாம்.

அந்த ஜந்துவிற்கு சில விஷயங்களை நினைவு படுத்த வேண்டும்.

ராம.சீனு இருக்கும் கிரிமினல் கூட்டத்தின் முன்னோடி சர்வாதிகாரி ஹிட்லர். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரான மூஞ்சே தங்கள் அமைப்பை உருவாக்க ஆலோசனை கேட்டது இன்னொரு சர்வாதிகாரியான முசோலினி யிடம்.

ஹிட்லர், முசோலினி இருவரையும் வீழ்த்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். செஞ்சேனை நெருங்கிய செய்தி கிடைத்ததும் விஷம் குடித்து செத்தான்.

முசோலினியின் சடலத்தை விளக்குக் கம்பத்தில் தலை கீழாக தொங்க விட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்.

பாஜக கிரிமினல் கூட்டம் ஒட்டி உறவாடும் அமெரிக்காவை அலற விட்டு புறமுதுகிட்டு ஓட வைத்தது சின்னன்சிறு நாடான வியட்னாமின் கம்யூனிஸ்டுகள்தான்.

அமெரிக்காவை நடு நடுங்க வைத்த பிடல் கேஸ்ட்ரோவும் செகுவாராவும் ஹூகோ சாவேஸும் இன்னும் பலரும் கம்யூனிஸ்டுகள்தான்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிருக்கு அஞ்சாமல் போராடியவர்களும் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தானே தவிர மன்னிப்பு கேட்டு காட்டிக் கொடுத்த சங்கிகள் கூட்டமல்ல.

சபரிமலை கோயில் விவகாரத்தை உசுப்பேற்றி காங்கிரஸோடு கள்ளக் கூட்டணி வைத்ததால் போன மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு கேரளாவில் பின்னடைவுதான். ஆனால் அனைத்து ஆரூடங்களையும் தகர்த்து கேரள வரலாறு காணாத அதிசயமாக இரண்டாவது முறையாக முதல்வரானார் தோழர் பினராயி விஜயன் எனும் கம்யூனிஸ்ட்.

இழந்த தளங்களான மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் நம்பிக்கை மலர்கள் துளிர் விட்டுள்ளன. அது நாளை விருட்சமாகும்.

மதுரை மக்களின் பாசத்துக்குரிய மக்கள் பிரதிநிதிகளாக தோழர் என்.சங்கரய்யா, தோழர் கே.பி.ஜானகியம்மா, தோழர் பி.மோகன், தோழர் என்.நன்மாறன் ஆகியோரின் பாரம்பரியத்தில் மக்கள் பணி செய்து வரும் தோழர் சு.வெங்கடேசனைக் கண்டு அஞ்சுவதால் பிதற்றுகிறது அந்த ஜந்து.

கம்யூனிஸ்டுகளின் சவப்பெட்டிக்கு ஆணி அடிப்பேன் என்று சொன்ன அந்த ஜந்து யார்?

பூரி ஜகன்னாதர் கோயில் தேர்த்திருவிழாவிற்கு வந்த பக்தர் திரளை அயோத்திக்கு வந்ததாக போட்டோஷாப் பொய்ப் பிரச்சாரம் செய்த ஃப்ராடு பேர்வழிதான் இது.

இதன் ஆணவத்திற்கு பாடம் புகட்டும் பொறுப்பு மதுரை வாக்காளர்களுக்குத்தான் உள்ளது.

தோழர் சு.வெங்கடேசன் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதோடு போலிப் பேரா ராம.சீனு டெபாசிட்டை இழக்க வேண்டும். அதை விட முக்கியம் நோட்டா வை விடவும் குறைவாக அந்த ஜந்துவின் வாக்குகள் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.

ஆணவப் பேய்களை வேப்பிலை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி ஊர்வலம் விட வேண்டும்.

செய்வீர்களா மதுரை வாக்காளர்களே!

செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்

 

2 comments:

  1. உங்கள் கட்சி ஏன் வயநாட்டில் ராகுலுடன் மோதுகிறது. இண்டி கூட்டனிதானே காங்கிரஸும்
    கம்யூனிஸ்டும்.

    ReplyDelete
    Replies
    1. அனாமதேயமா ஒளிஞ்சு வராம உண்மையான அடையாளத்தோட வா. அப்போ பதில் சொல்றேன். ப்ரொபைல் லாக் செய்யற கோழை சங்கிகளால் அது முடியாது.

      Delete