நான்கு வருடத்துக்கு முன்பு எழுதிய பதிவு கீழே உள்ளது.
இப்போது ஏன் மீள் பதிவு.
முதலில் முன்பு எழுதியதை படியுங்கள்
அக்யூஸ்ட் நீதான் டி.எஸ்.பி
பசுமைவழிச் சாலை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தரகர் வேலை செய்யும் மோடி - எடப்பாடி கூட்டணி வகையறாக்கள் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக அராஜகத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்தின் கழுத்தை கொலைவாளால் அறுக்கிறது.
அந்த அராஜகத்தின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பத்தாண்டு காலம் பணியாற்றியவரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான தோழர் பி.டெல்லிபாபு அவர்களை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்துள்ளார்கள்.
எட்டு வழிச்சாலைக்கான போராட்டத்தில் பங்கேற்ற அவரை மோசமான முறையில் நடத்தியுள்ளார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாண்டு காலம் சிறப்பாக பணி செய்த ஒருவரிடம் செங்கம் டி.எஸ்.பி எப்படி பேசியுள்ளான்(ர்) என்பதை பாருங்கள்.
டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி:
"இவன் செல்போன பிடுங்கு... இவன் அக்கியூஸ்ட். இவனுக்கு எவன்டா எம்.எல்.ஏ பதவி கொடுத்தது?
உன்னை எவன்டா அரூரிலிருந்து செங்கத்திற்கு வரச்சொன்னது?
தருமபுரி மாவட்ட எல்லையைவிட்டு தான்டி வரக்கூடாது.
பெரிய புடுங்கியா நீ?
உன்னை அரஸ்ட் பன்னச் சொல்லி SP (திருவண்ணாமலை மாவட்டம்), DIG என் உயிர எடுக்கிறாங்கடா...
உன்ன அரஸ்ட் பன்னலனா, ARக்கு போகச் சொல்லிட்டாங்கடா..."
தோழர் டில்லிபாபு :
"நான் 10 ஆண்டுகாலம் சட்டமன்றஉறுப்பினர்.
கைதுக்கு நான் பயந்தவன் அல்ல... எதற்காக கைது செய்யறீங்க?"
டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி:
"நான் போலீஸ் இல்லை, பொறுக்கி"
என்ற திரைப்பட வசனத்தை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் நிரூபித்து விடுவார்கள் போல.
அரசியல் சாசனம் அளித்துள்ள போராட்ட உரிமைக்கு எதிராக செயல்பட்ட டி.எஸ்.பி தான் உண்மையான அக்யூஸ்ட்.
காக்கிச்சட்டை அளிக்கும் திமிரில் ஆணவமாக நடந்து கொள்ளும் இது போன்ற அதிகாரிகளை துரத்தி அடிப்பது காலத்தின் கட்டாயம்.
இப்போது ஏன் இப்பதிவு????
இந்த இழப்பீட்டுத் தொகை ஒரு லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு தன் நிதியில் இருந்து தரக்கூடாது.
அந்த அக்யூஸ்ட் டி.எஸ்.பி சுந்தரமூர்த்தியிடமிருந்து வசூலித்துத்தான் தர வேண்டும்.
அப்போதுதான் "நான் போலீஸ் இல்லை, பொறுக்கி" என்று செயல்படும் ஆபீசர்களுக்கு புத்தி வரும்.
சேலம் - சென்னை ரோடு மக்கள் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தற்போது மக்கள் ஆட்சியில் தற்போது சென்னை - சேலம் என மீண்டும் வருகிறது. இப்போ என்ன பன்னுவே இப்போ என்ன பன்னுவே .
ReplyDeleteமறுப்டியும் வந்தால் மறுபடியும் போராடுவோம். நீ என்ன பண்ணுவே? அதை சொல்லு,
Deleteஉலக மேட்டர் எல்லாம் பேசும் திருவாளர் ராமர் தற்போது கற்பழிப்பு கிடங்காக மாறி வரும் தமிழ்நாட்டை பற்றி பேசுவாரா?
ReplyDeleteவிருதுநகர் சம்பவத்தைப் பற்றி எழுதும் முன்பே நடவடிக்கை எடுத்துள்ளது மாநில அரசு. முதலில் வார்த்தையை மாற்ற்வும். பாலியல் வன் கொடுமை என்று சொல்லவும். நான் பேசுவது இருக்கட்டும். நீங்கள் என்ன பேசினீர்கள் என்று சொல்ல முடியுமா? அதன் இணைப்பை தர முடியுமா?
DeleteToday at vellore a doctor was molested by 4 people's. The law and order is going worst.
ReplyDelete