Tuesday, March 22, 2022

எதிர்ப்பது சமுகத்தின் பொறுப்பு



 *நாளொரு கேள்வி: 18.03.2022*


தொடர் எண்: *655*

*மார்ச் 28, 29 இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் - சிறப்பு கேள்வி பதில்*

இன்று நம்மோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மூத்த தலைவர் *அமானுல்லாகான்* ( தமிழில் துளசிதரன், கோவை)
#########################

*பங்கு விற்பனையை எதிர்ப்பது சமுகத்தின் பொறுப்பு*

கேள்வி: எல்.ஐ.சி பங்கு விற்பனையை முன்னிட்டு எல்.ஐ.சியின் உள்ளார்ந்த மதிப்பீடு செய்யப்பட்டு இருப்பது பற்றி... 

*அமானுல்லாகான்* அரசால் நியமிக்கப்பட்ட *மில்லிமேன் என்ற ஆக்சூரியல் நிறுவனமானது* எல்.ஐ.சி யின் உள்ளார்ந்த மதிப்பை (Embedded value) *ரூ.5.4 லட்சம் கோடி*  என மதிப்பிட்டுள்ளது.  சந்தை மதிப்பு  என்பது இந்த மதிப்பை விட அதிகமாக இருக்கும். அது *பெருக்கல் காரணியை* (Factor for Multiplication) கொண்டிருக்கும். கன்சர்வேடிவ் முறையில் அதன் நிறுவன மதிப்பில் மூன்று மடங்கு என மதிப்பிட்டாலும், *எல்.ஐ.சி யின் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல்* இருக்கும். 

ஆனால் இந்த மதிப்பீட்டின் முழு செயல்முறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. பங்குதாரர்கள் எவருடனும் விவாதம் நடத்தப்படவில்லை.  அரசு எல்.ஐ.சி யின் மதிப்பை அதன் உண்மையான மதிப்பை விட கணிசமாகக் குறைத்து காட்டி இருக்கலாம் என்ற தீவிர சந்தேகத்தை இந்த *வெளிப்படைத்தன்மை இன்மை* எழுப்புகிறது. அரசால் விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் எப்போதும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்குதாரர்களுக்கான லாபத்தை அதிகரிக்க கவனம் செலுத்துதல், அரசு முதலீட்டை விலக்குவது என்பது இறுதியாக தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கிறது என்பதையே கடந்த கால அனுபவம் காட்டுகிறது. அரசு முதலீட்டை விலக்குவது, தேசிய வளர்ச்சியிலிருந்து விலகச் செய்யும்.  பங்குதாரர்களுக்கு லாபத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிற நிலையை உருவாக்கும்.   *எல்.ஐ.சி யின் முழு வணிக மாதிரியும் மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடும்.* உயர் வர்க்க  வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். நலிந்த பிரிவினருக்கு சமூக ரீதியாக தேவையான காப்பீடு புறக்கணிக்கப்படும்.  சமூகம், நகர்புற மற்றும் பெருநகர மையங்களில் அதிக கவனம் செலுத்தப்படும். 

எனவே *தேசிய பொருளாதாரம், பொருளாதாரச் சுதந்திரம் என்ற பெயரில் எல்.ஐ.சி யில் முதலீட்டை விலக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்ப்பது* ஒட்டு மொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும்.

*செவ்வானம்*

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீயெல்லாம் வெட்டியாத்தானே உயிர் வாழற! செத்துப் போயேண்டா கருங்காலி நாயே

      Delete