இப்போது நான் பகிர்வது கடந்த வருடம் பகிர்ந்த பதிவு
இதுதான்யா இந்தியா . . .
வழக்கறிஞரும் இளம் எழுத்தாளருமான தோழர் அ.கரீம் அவர்களின் முக நூல் பதிவையும் நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் நீல நிறத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
"மாரியாத்தாவுக்கு மடி பிச்சை தாங்கம்மா " என்ற குரல் இன்று காலை ஆறு மணியிலிருந்து எங்கள் வீட்டு வாசலில் கேட்டுக்கொண்டே இருந்தது. வரும் எல்லோருக்கும் கொஞ்சம் அரிசியை மடி பிச்சையாக போடுவோம் அது வழக்கம்.
எங்கள் வீடு இஸ்லாமிய வீடு என்று தெரிந்தே அருகில் உள்ளவர்கள் மடி பிச்சை கேட்டு எல்லா வீடுகளுக்கு வருவதை போலவே எங்கள் வீட்டுக்கும் வருவார்கள். நான் அலுவலகம் செல்வதற்கு முன்பு வரை பலருக்கும் நான் அரிசி கொடுத்தேன்.
எங்கள் ஊர் புளியகுளம் மாரியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெறும் நாளில் என் அம்மா பல வருடங்களாக தேர் கிளம்பும் போது பூசாரியிடம் தேங்காய் பழம் கொடுத்து பூசை செய்து சாமிக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.... பின்பு அதை எல்லோரும் சாப்பிடுவோம். பல ஆண்டுகளாக இந்த வழக்கம் உள்ளது.(இந்த ஆண்டு தேர் இல்லை ஆனால் எப்போதும் போல் சாமிக்கு தேங்காய் உடைத்தாக்கி விட்டது )
மதம் தாண்டிய பரஸ்பர உறவை பண்பாட்டை தகர்க்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதை புறந்தள்ளிவிட்டு மக்கள் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இதுதான் நாம் சொல்கிற, உயர்த்திப் பிடிக்கிற மத நல்லிணக்கம். மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேட விழையும் மத அடிப்படைவாதக் கும்பலுக்கு உந்த உணர்வு எரிச்சலூட்டும்.
இந்தியா முழுதும் இந்த உணர்வு இன்னும் நீடிக்கிறது. இதனை சிதைக்க முயலும் எந்த சதிக்கும் நாம் இடம் கொடோம் என்று உறுதியேற்போம்.
உண்மையில் இதுதான் இந்தியா
பிகு: மேலே உள்ள படமும் தோழர் கரீம் பகிர்ந்து கொண்டதுதான்.
இப்போது பகிர்வது இந்த வருடம் அதே (இளம்) தோழர் கரீம் பகிர்ந்து கொண்ட புகைப்படமும் பதிவும்
கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா துவங்கியது... கால காலமாக நடைபெறும் வழக்கமும் எப்போதும் போலவே துவங்கியது.
எந்த சங்கியாலும் இதை ம்மாற்ற முடியாது.
No comments:
Post a Comment