Friday, March 18, 2022

20,000 . நிசமாவா அண்ணாமலை?

 


எங்கள் மதுரைக் கோட்ட தோழர் எழுத்தாளர் ச.சுப்பாராவ், பாரதி புத்தகாலய பொறுப்பாளர் தோழர் முகமது சிராஜீதின் ஆகியோர் வாசிப்பு திலகங்கள். அவர்களே இருபதாயிரம் புத்தகங்களை படித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

ஆனாலும் தான் படித்ததாக ஆட்டுக்காரர் சொல்கிறார். தோழர் சுப்பாராவ் போல அவரால் பட்டியல் போட முடியுமா?

மருத்துவர் சென் பாலனோ அது சாத்தியமா என்று கணக்கு போட்டு கேட்கிறார்.


ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படிப்பதாக கணக்கு வைத்தாலும் 20,000 புத்தகத்திற்கு 20,000 நாட்கள்.
20,000/365 = 54.79
கிட்டத்தட்ட 54 வருடங்கள்.
பிறந்த முதல்நாளே படிக்க ஆரம்பித்து இருந்தாலும் இன்னைக்கு 54 வயது ஆகிருக்கும்.
ஒருவேளை சிட்டி தி ரோபோவா இருப்பாரோ?
என்னவோ ஒன்று, நமக்கு அடுத்த சீமான் கிடைத்துவிட்டார் என்பது மட்டும் புரிகிறது

அப்படியே அவர் 20,000 புத்தகங்களை படித்ததாகவே இருக்கட்டும். அதனால் என்ன பிரயோசனம் அண்ணாமலை?

உங்களிடம் மத வெறிதான் இருக்கிறது. மனிதம் என்பது எச்.ராசாவின் ஐகோர்ட் அளவுக்குக் கூட கிடையாது.

சொல்வதெல்லாம் பொய். செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்.

அப்படியென்றால் நீங்கள் படித்த 20,000 புத்தகங்களும் உங்களைப் போலவே வெற்றுக் குப்பைதான் என்று அர்த்தம்.

பிகு: மோடியை விஞ்சிய பெரும் பொய்யன் அண்ணாமலை என்று முன்பு எழுதியிருந்தேன். அதை மீண்டும் நிரூபித்து விட்டார் ஆட்டுக்காரர்.

No comments:

Post a Comment