Wednesday, March 2, 2022

அசிங்கப்பட்ட சுமந்து . . .

 


"சென்னை புத்தக விழா என்பது திராவிட இயக்க பிரச்சாரத்தை செய்யும் மிகப் பெரிய மையமாக இருக்கிறது. ஏராளமான புனைவுக் கதைகள் நிரம்பியுள்ளது" 

என்று தொலைக்காட்சி சங்கி சுமந்து ராமன் ட்வீட்டியிருந்தார்.

2006 ம் வருடம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக விழாவிற்கு சென்று வருபவன் என்ற முறையில் ஒன்றை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

அறுநூறு ஸ்டால்கள் இருந்தால் அதில் ஐம்பது ஸ்டால்கள்தான் திராவிடக் கருத்தியல், மார்க்சிய சித்தாந்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நூல்களின் ஸ்டால்களாக இருக்கும்.

விஜயபாரதம் உள்ளிட்ட இந்துத்துவா ஸ்டால்களும் உண்டு. இஸ்லாமிய கோட்பாடுகளை சொல்லும் ஸ்டால்களும் உண்டு.

தொழில்நுட்ப நூல்கள், சமையல் நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், குடும்பக் கதைகள் ஆகியவற்றுக்கான ஸ்டால்கள்தான் அதிகம். 

இந்த ஐம்பது ஸ்டால்களே சுமந்து போன்ற சங்கிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் அவற்றுக்கு கிடைக்கும் வரவேற்பு நன்றாக உள்ளது என்று அர்த்தம்.

சுமந்தின் ட்வீட்டை படித்தவுடன் உடனடியாக இரண்டு பின்னூட்டங்களை அளித்தேன்.


பிறகுதான் கவனித்தேன். பாவம் சுமந்து அவரை செமயாக போட்டு தாக்கி இருந்தார்கள். 

ஆனால் அதற்காக எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.

ஏனென்றால்

சங்கிகளின் கொள்கை

"துப்பினால் துடைச்சுப்போம்"


2 comments:

  1. அவர் உம்மை போல அல்ல.விமர்சன கருத்துகளுகளை அழிப்பதில்லை, கருத்துக்கு மரியாதை உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அய்யா அனாமதேயம், அங்கே நான் பின்னூட்டமிட்டது என் சொந்த அடையாளத்தோடு. ஒளிந்து கொண்டு அனாமதேயமாக அநாகரீக வார்த்தைகளின் பின்னூட்டமிடும் கோழைகளுக்கு கருத்துச் சுதந்திரமோ, கத்திரிக்கையோ கிடையாது

      Delete