சேரனின் ஆட்டோகிராப் படத்தின் பாடல். பா.விஜய்க்கும் கே.எஸ்.சித்ராவுக்கும் சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகி என இரு தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்த "ஒவ்வொரு பூக்களுமே" பாடலின்
வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்.
யூட்யூப் இணைப்பு இங்கே
அவன் யூட்யூபில் பதிவேற்றியுள்ள ஐம்பதாவது காணொளி இது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்பதால் அதை அவனுக்கு கடத்தினேன். துவக்கத்தில் எங்கள் விருப்பத்திற்காக வகுப்புக்களுக்கு சென்றவனுக்கே ஒரு கட்டத்தில் விருப்பம் வர அப்போது துவங்கியது மாயம்.
உரிய ஆசிரியரிடம் கற்றுக் கொள்வது கர்னாடக இசைதான். திரைப்பாடல்களை தானே கற்றுக் கொண்டு வாசித்து பதிவேற்றுகிறான்.
இசை எப்போதுமே உற்சாகம் தரும், அமைதி தரும். கேட்பவன் என்ற நிலையில் மட்டுமல்லாமல் கொடுக்கும் நிலையில் இருப்பது மகிழ்ச்சியே.
முந்தைய 49 காணொளிகளை பார்க்க விரும்புவர்களுக்காக அவற்றின் இணைப்புக்களை கீழே இணைத்துள்ளேன். பாடலின் பெயரைத் தொட்டாலே காணொளிக்கு சென்று விடலாம்.
கமலஹாசன் பிறந்த நாள் சிறப்புப் பதிவு 8 பாடல்கள்
மடை திறந்து பாயும் நதியலை நான்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வெண்ணிலவே வெண்ணிலவே, விண்ணைத் தாண்டி வருவாயா?
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன்
எஸ்.பி.பி க்கு இசையஞ்சலி - 11 பாடல்கள்
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்
புதுவெள்ளை மழை இங்கு பொழிகிறது
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
பார்வை கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி
உங்கள் ஆதரவு அவனை மேலும் உயர்த்தும்
No comments:
Post a Comment