சில நாட்களுக்கு முன்பாக மனுஷ்ய புத்திரன் தனது உயிர்மை
அரங்கிற்கு கூட்டம் வருவதைப் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தார்.
அதற்கு வேறொருவரின் பதிவில் மூமூமூத்த்த்த்த்த்த எழுத்து
வியாபாரி மாலன் பின்னூட்டமிட்டு தன் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியிருந்தார்.
நான் செவ்வாய் கிழமையன்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த
போது உயிர்மை அரங்கிற்கும் சென்றிருந்தேன். நான் சென்றது கொஞ்சம் மந்தமான மதிய
நேரம். ஆனாலும் பெரும்பாலான அரங்குகளில்
வாசகர்கள் இருந்தார்கள். ஈ ஓட்டிக் கொண்டிருந்த மூன்று அரங்குகளைப் பற்றி நாளை எழுதுகிறேன்.
நான் பார்த்தவரை அந்த நேரத்தில் நிற்கக் கூட இடமில்லாத அளவு
கூட்டம் இருந்தது “நீலம்” பதிப்பகத்தில். அதற்கு அடுத்த இடத்தில் இருந்தது
“உயிர்மை” பதிப்பகம்தான். நிறைய பேர் “மிஸ் யூ” வை புரட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான் வாங்கிய நூல்களுக்கு பணம் கொடுக்கவே காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது
மனுஷ்யபுத்திரன் இல்லை. இருந்திருந்தால் இன்னும் கூட கூட்டம் சேர்ந்திருக்கும்.
ஆகவே மிஸ்டர் மாலன், மனுஷ்யபுத்திரன் எழுதியது நிஜம்தான். என்ன
உங்களைப் போன்றவர்கள் எழுதாததால் அவரே எழுதிக் கொண்டு விட்டார் அதன் மூலம் உங்கள்
பொறாமை புத்தியும் அம்பலப்படுத்திக் கொண்டு விட்டீர்கள். பாவம் வயதானவர் என்பதால்
இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment