Saturday, March 5, 2022

டுபாக்கூர் பாகுபலி

 


இந்த தலைப்பிற்காக எஸ்.எஸ்.ராஜமவுலி கோபப்படலாம்.

ஆனால் கீழே உள்ள படத்தைப் பார்த்தால் அவர் கோபம் சங்கிகள் மீது திரும்பி விடும்.


 

உத்தர்கண்ட் வெள்ளத்திலிருந்து இன்னோவா கார் மூலமா 60,000 குஜராத்திகளை காப்பாற்றியதாக சொல்லப்பட்ட கதையை “பட்டி டிங்கரிங்க்” பார்த்து உக்ரைனாக மாற்றி வழக்கம் போல வீர தீர பிரதாபங்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 உண்மையில் இந்திய மாணவர்கள் இன்னும் அபாயத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவில்லை. கார்கிவ் நகரை விட்டு வெளியேறச் சொன்ன தூதரக அறிவுறுத்தல்  மிகவும் கால தாமதமானது என்றுதான் மாணவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பாரத மாதாவிற்கு ஜே சொன்ன மாணவர்கள் மோடிக்கு ஜே சொல்லவில்லை. மௌனமும் சிரிப்புமே பதிலாக இருந்துள்ளது.

 போர் மேகம் சூழத்தொடங்கிய போதே சுதாரித்துக் கொண்டு மீட்புப்  பணியை   துவக்கி இருக்க வேண்டும். ஏர் இந்தியாவை டாடாவிடம் சமர்ப்பிக்காமல் இருந்திருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்கலாம்.  ஆனால் அப்படிப்பட்ட தொலை நோக்குப் பார்வையெல்லாம் இவர்களுக்கு என்றைக்கு இருந்திருக்கிறது?

 ஆனால் வெற்று பீற்றல், வெற்று புகழுரை மூலம் ஏதோ பெரியதாக சாதித்ததாக சித்தரிக்கின்றனர்.

 இந்தியக் கொடியை கையிலேந்தினால் பிரச்சினை இல்லை என்று பெரிதாகச் சொன்னார்கள். ஆனால் அதுவே சுலபமாக தாக்குவதற்கு அடையாளம் காட்டியது. அப்படி இருக்கையில் பாகிஸ்தான் நாட்டினரும் இந்தியக் கொடியை கையிலெடுத்துக் கொண்டார்கள் என்ற கதைப்பதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?

 


தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் மூடர்களாக சங்கிகள் எவ்வளவு நாட்கள் நீடிக்கப் போகிறார்கள்?

 இந்திய வரலாற்றில் விடுதலைப் போருக்கு முன்பு அவர்களுக்கு கிடைத்த பெயர் துரோகிகள், ஆள்காட்டிகள், சரணடைந்த கோழைகள்.

 அந்த பெயர் மோடியின் காலத்தில் மாறி விட்டது.

 ஆம் டுபாக்கூர்கள் என்று மாறி விட்டது.

 பிகு 1  இந்த இரண்டு படங்களும் பெண் சங்கி மயிலை ரமாவின் உபயம்.

 பிகு 2 : எதுவுமே செய்யாம எல்லாம் செஞ்சதா ஏன் சீன் போடறீங்க என்று உக்ரைனில் உள்ள ஒரு மாணவன் கழுவி ஊற்றிய பதிவுகள் கீழே உள்ளது.





No comments:

Post a Comment