எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அதற்கு எதிராக இன்று தேசத்தின் தலைநகரில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.
தலைநகர் போராட்டத்தை ஒட்டி தென் மண்டலம் முழுதும் தர்ணா இயக்கங்கள் நடைபெறவுள்ளது.
எங்கள் கோட்டத்தில் வேலூரிலும் புதுவையிலும் . . .
பங்கு விற்பனையின் மூலம் பாலிசிதாரர்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் குறித்து பொருளாதார நிபுணரும் கேரள முன்னாள் நிதியமைச்சருமான தோழர் தாமஸ் ஐசக் எழுதியுள்ளதை படியுங்கள்.
உண்மையான தேச பக்தர் என்றால் எங்களோடு நில்லுங்கள். எல்.ஐ.சி பங்கு விற்பனையை ஆதரிப்பவர் எவராயினும் அவர்கள்தான் நிஜமான தேச விரோதிகள், மக்கள் விரோதிகள்,
*நாளொரு கேள்வி: 04.03.2022*
தொடர் எண் : *641*
இன்று நம்மோடு கேரள முன்னாள் நிதியமைச்சர் *டி.எம். தாமஸ் ஐசக்*
#########################
*உண்மையான உடமையாளர்களை கருத்தில் கொள்ளாத முடிவு*
கேள்வி: எல்.ஐ.சி பங்கு விற்பனை பாலிசிதாரர்களின் நலன் மீது என்ன தாக்கம் செலுத்தும்?
*தாமஸ் ஐசக்*
பாலிசிதாரர்கள்தான் எல்.ஐ.சி யின் *உண்மையான உடமையாளர்கள்.* பொருளாதார பிரம்மாண்டமான எல்.ஐ.சி யின் பங்கு விற்பனை குறித்து பாலிசிதாரர்களுடன் கலந்தாலோசனை எதையும் செய்யவில்லை. நிறைய பாலிசிதாரர்களுக்கு *எல்.ஐ.சி யின் அடிப்படை குணமே மாற்றத்திற்கு உள்ளாவது* பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கெனவே இரு முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒன்று பகிரத்தக்க பாலிசிகள் (Participating Policies) மீதான நிகர உபரி மட்டுமே பாலிசிதாரர்களுக்கு பிரித்து தரப்படும் என்பது. அதிலும் 95 சதவீத உபரி பங்கீடு என்பது 90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
*ஐ.ஆர்.டி.ஏ* என்கிற கட்டுப்பாட்டு ஆணையம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது பொதுவாக நடந்தேறுகிறது. அது எந்த அளவிற்கு சென்றது என்றால், எல்.ஐ.சி யின் முக்கிய பாலிசி திட்டங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து வணிகத்தில் குழப்பம் ஏற்படுத்துகிற அளவிற்கு கூட நடந்தது.
பாலிசிதாரர் நலன் காக்கிற பாதுகாவலர் ஆக ஐ.ஆர்.டி.ஏ இருக்க வேண்டும். ஆனால் எல்.ஐ.சி பற்றிய மதிப்பீடுகளை ஐ.ஆர்.டி.ஏ பாலிசிதாரர் கோணத்தில் செய்யாமல் பங்குதாரர் கோணத்தில் செய்துள்ளது.
எல்.ஐ.சி பங்கு விற்பனை நிச்சயம் எதிர்காலத்தில் *அரசு உத்தரவாதத்தை* பாதிக்கும். இடர் விரும்பாத மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே அரசு உத்தரவாதம் முக்கியத்துவம் பெறுகிறது.
பங்கு விற்பனை அதிகமாக அதிகமாக *லாப நோக்கமே எல்.ஐ.சி யின் முதலீட்டு முடிவுகளை துரத்தும்.* ஆகவே முதலீடுகள் அதிக லாபம் தருகிற இடர் மிக்க பங்குகள், கடன் பத்திரங்களை நாடிச் செல்லும். இது தொழிலையும் சிக்கலுக்குள் ஆழ்த்தும். *1990 - 2020 காலத்தில் மட்டும் 82 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அமெரிக்காவில் கதவை மூடியுள்ளன.*
எல்.ஐ.சி யின் வணிக உத்திகளும் சாமானிய மக்களிடம் இருந்தும், கிராமப் புறங்களில் இருந்தும் விலக ஆரம்பிக்கும். 2021 இல் எல்.ஐ.சி யின் *சராசரி ஆண்டு பிரீமியம்* ரூ 16156. தனியார் நிறுவனங்களின் சராசரி ஆண்டு பிரீமியம் ரூ 89004 ஆகும். *எல்.ஐ.சி யின் அலுவகங்களில் 60 சதவீதம் அலுவலகங்கள்* ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு கீழே உள்ள ஊர்களில்தான் உள்ளது. இது தனியார் துறை அலுவலக அமைவிடங்களுக்கு நேர் எதிரானது.
2019 - 20 இல் *முறையற்ற வணிக நடவடிக்கைகள்* மொத்தம் இன்சூரன்ஸ் துறையில் 43444 நடந்துள்ளன. அதில் 90 சதவீதம் தனியார் துறைகளில்தான் அரங்கேறி உள்ளன. அவர்களின் *சந்தைப் பங்கு* வணிகத்தில் 34 சதவீதம்தான் என்பதை இணைத்துப் பாருங்கள்.
2021 இல் எல்.ஐ.சி யின் *நிர்வாக செலவுகள்* 8.68 சதவீதம். ஆனால் தனியார் துறையின் நிர்வாக செலவுகள் 11.72 சதவீதம்.
(இந்த தகவல்கள் பாலிசிதாரர் நலன் குறித்த சித்திரங்களை நமக்கு தருகின்றன)
*செவ்வானம்*
No comments:
Post a Comment