இன்று காலை ஆங்கில இந்து நாளிதழை புரட்டிய போது "முதோல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பெண்ணிற்கு எந்த வழக்கறிஞரும் உதவக் கூடாது என இந்த்த்துவ அமைப்புக்கள் கூறியுள்ளது" என்ற செய்தியை படித்தேன்.
அப்படி என்ன பெரும் தவறை அவர் செய்து விட்டார் என்று தேடிப்பார்த்தால்
23 ம் தேதி அன்று குத்மா ஷேக் என்ற பெண்மணி தன் வாட்ஸப் ஸ்ட்டேட்டஸில் "அனைத்து நாடுகளிலும் அமைதியும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவ கடவுள் அருள் புரியட்டும்" என்று வைத்துள்ளார்.
23ம் தேதி பாகிஸ்தான் குடியரசு தினம். அதற்குத்தான் அவர் வாழ்த்து சொல்லி உள்ளார் என்று அருண் குமார் பஜான்ட்ரி எனும் சங்கி காவல் நிலையத்தில் புகார் செய்ய. "மதத்தின், இனத்தின் அடிப்படையில் பிரிவினையை தூண்டியது, இரு குழுக்களுக்கு இடையே மோதலை தூண்டியது" ஆகிய இரு பிரிவுகளில் அந்த 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது ஸ்டேட்டஸிகும் காவல் துறை பதிவு செய்த குற்றச்சாட்டுக்களும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?
பாகிஸ்தான் குடியரசு நாளுக்கு வாழ்த்து சொன்னதாகவே இருக்கட்டும். அது என்ன சட்ட விரோதமா?
இந்தியாவில் யாருமே அடுத்த நாட்டின் சுதந்திர தினத்துக்கோ, குடியரசு தினத்துக்கோ வாழ்த்து சொன்னதே இல்லையா? இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டத்திற்கே வெளி நாட்டுத் தலைவரை அழைத்துத்தானே மகிழ்கிறோம்!
அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் மென் பொருள் நிறுவனங்கள் விடுமுறையே அளிக்குமே!
கர்னாடகா மத வெறியர்களின் மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.
முதலில் ஹிஜாப் பிரச்சினை.
பிறகு கோவில் திருவிழாக்களில் மாற்று மதத்தினர் கடை போட தடை.
இந்த முட்டாள்தனம் மூன்றாவது சம்பவம்.
பரம்பரை சங்கிகளை விட பஞ்சத்துக்கு சங்கியான முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள மாநிலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்.
பிகு 1: அந்த முதோல் என்ற ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்தமாம். சர்ச்சையை உருவாக்கிய சங்கிகளை விட, அதை ஏற்று கைது செய்த அந்த ஊர் போலீஸை விட அந்த நாய்களுக்கு அறிவு அதிகமாகவே இருக்கும். 😀😀😀😀😀😀
பிகு 2 : பிகு 1 ஐ நான் சிரிப்பு எமோஜிகளோடு சொல்லியுள்ளதால் நான் போலீஸை இழிவு படுத்தியதாக அர்த்தமாகாது. என்ன டெல்லி ஜட்ஜய்யா ரைட்டுதானே!
No comments:
Post a Comment