கீழே உள்ள செய்தியில் கட்டம் கட்டப்பட்டுள்ள பகுதியை முதலில் படித்து விடுங்கள்.
இந்த மனிதன் எல்லாம் எத்தனை கோடி லஞ்சம் கொடுத்து துணைவேந்தர் பதவி பெற்றா(னோ போடுவதா ரோ போடுவதா என்று ஒரு குழப்பம்) என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இருபத்தி நான்கு வகையான போர் விமானங்கள் கொண்ட ராவணனிடம் சில கேள்விகள் கேட்கத் தோன்றியது.
வால்மீகியும் கம்பனும் கூட சொல்லாத விஷயமான இருபத்தி நான்கு வகையான போர் விமானங்களை நீங்கள் வைத்திருந்த தகவலை சொன்னது ராணுவ ரகசியத்தை வெளியிட்ட குற்றம்தானே?
உங்களின் ராணுவ விமானங்களில் ரபேல் விமானங்கள் எவ்வளவு?
அந்த விமானங்களை வாங்கும் முடிவை நீங்கள் தனியாக எடுத்தீர்களா? இல்லை உங்கள் அமைச்சரவை எடுத்ததா?
அந்த விமானங்கள் தொடர்பாக உங்கள் அரசு கொடுத்த தொகை எவ்வளவு? வெளியே கணக்கெழுதிய தொகை எவ்வளவு?
இந்த போர் விமானங்கள் வாங்குவதில் இடைத் தரகர்களை பயன்படுத்தினீர்களா? அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு?
ஒரே ஒரு ஒப்பந்தம்தான் போட்டீர்களா இல்லை உங்கள் அதிகாரிகள் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு நீங்களாகவே தனியாகவே ஒப்பந்தம் போட்டீர்களா?
இந்த விமானங்களை வாங்குவதன் மூலம் திவாலாகும் நிலையில் இருந்த எந்த முதலாளி பிழைத்துக் கொண்டார்? அதே போல எந்த அரசு நிறுவனம் நாசமானது?
ராவணன் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீட் நிம்மி அம்மையார் மாதிரி ராவணனின் பாதுகாப்பு அமைச்சர் பதில் சொன்னால் கூட பரவாயில்லை.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete