நேற்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி. இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு துணை நிற்கிற ஹெலிகாப்டரை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டட் உருவாக்கி உள்ளது. ரபேல் நிறுவனத்தின் போர் விமானத்தை இந்தியாவில் உருவாக்க இவர்களுக்கு தகுதி கிடையாது, மாறாக பொம்மை ப்ளேன் கூட தயாரிக்காத அம்பானிக்குத்தான் உள்ளது என்று சொல்கிறார் நீட் நிர்மலா அம்மையார்.
படுபாவிகள்!!! உருப்படுவார்களா ????
படுபாவிகள்!!! உருப்படுவார்களா ????
எச்ஏஎல் நிறுவனத்தின் போர் ஹெலிகாப்டர் ஏவுகணை தாக்குதல் நடத்தும் சோதனை வெற்றி
பெங்களூரு, ஜன.17-பெங்களூரு இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் (எச்ஏஎல்) நிறுவனம் தயாரித்துள்ள இலகு ரக ஹெலி காப்டர், போர்க்கள சோதனையில் வெற்றி கண்டுள்ளது. உலக அளவில் தனித்திறன் வாய்ந்த இந்த ஹெலிகாப்டர்இந்திய ராணுவத்தில் விரைவில் இணைகிறது.பெங்களூரில் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல், புதிய இலகு ரக ஹெலி காப்டரை தயாரித்து உள்ளது.
இந்த புதிய ஹெலிகாப்டரின் தாக்குதல் திறன், போர்க்களத்தில் அதன் செய லாற்றல் ஆகியவற்றை பரிசோதித்து பார்க்கும் நிகழ்வு ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் நடைபெற்றது. விண்ணில் பறந்தபடியே, விண்ணில் நகரும் மற்றொரு இலக்கை நோக்கி ராக்கெட்டை ஏவும் சோதனை நடைபெற்றது. விமானப்படையின் அதிகாரிகளான சுபாஷ் பி ஜான், ரஞ்சித் சித்தலே, எச்ஏஎல் நிறுவனஎன்ஜினீயர் ராஜீவ் துபே ஆகியோர் ஹெலிகாப்டரில் பறந்தபடியே பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது விண்ணில் நகரும் இலக்கு துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டது.
இதன் மூலம் இலகு ரக ஹெலிகாப்டரின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக எச்.ஏ.எல் நிறுவன தலைவர் ஆர்.மாதவன் கூறியுள்ளார்.இந்த புதிய இலகு ரக ஹெலிகாப்டர்தான் நாட்டிலேயே முதல் முறையாக விண்ணில் பறந்தபடி விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. 20 மி.மீட்டர் விட்டம் கொண்ட குண்டுகளை சுடும் துப்பாக்கியையும், 70 மி.மீட்டர் விட்டம் கொண்ட ராக்கெட்களையும் ஹெலிகாப்டர் கொண்டுள்ளது.
இமயமலையில் உள்ள 20, 000 அடி உயரம் கொண்ட சியாச்சின் பனிமலைப் பரப்பிலும் பறந்து தாக்கும் திறன் இலகு ரக ஹெலிகாப்டருக்கு உள்ளது. இந்த அளவுக்கு திறன் கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டர் உலகில் எந்த நாட்டிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விமானியின் கண்ணுக்கு முன்னால் உள்ள திரையிலேயே எதிரி இலக்கை காட்டும் நவீன தொழில் நுட்பம், அகச்சிவப்பு கதிர் மூலம் இரவிலும் இலக்கை காட்டும் தொழில் நுட்பம் ஆகியவையும் ஹெலிகாப்டரில் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் இலக்கு எங்கிருந்தாலும் தேடி அழிக்க முடிவதோடு, இலக்கு இருக்கும் இடத்தை நோக்கி ஹெலிகாப்டரை திருப்பாமல் தாக்கும் வல்லமையும் கொண்டுள்ளது.
மேலும் மிக குறைந்த உயரத்திலும் பறந்து தாக்கும் திறனுடன், துல்லிய தாக்குதல் வல்லமையும் கொண்டுள்ள ஹெலிகாப்டரை வாங்க ராணுவமும், விமானப்படையும் முன்பதிவு செய்துள் ளன.இதன் படி விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்களும், ராணுவத்திற்கு 5 ஹெலிகாப்டர்களும் முதற்கட்டமாக வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉன்னைப் பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சிவப்பு விளக்கு பகுதியில் பிறந்து சிவப்பு விளக்கு பகுதியில் வளர்ந்து அங்கே ஒரு தரகனாக வாழ்க்கை நடத்தி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு அழுகிப்போன உடலோடும் மனதோடும் விரைவில் செத்துப் போகப் போகும் உன் வக்கிரம் இப்படி அசிங்கமாக ஆபாசமாக எழுதுவதன் மூலம் வெளிப்படுகிறது.
Deleteஒரு விஷயம் தெரிந்து கொள். என்னதான் சீரியல் வில்லிகள் போல முயற்சி செய்தாலும் உன்னால் என் உறுதியை குலைக்க முடியாது. அப்படி முயன்று தோற்றுப் போன சில முட்டாள்கள் பெயர் விலாசத்தை உன் சொந்த ஐ.டி யில் வந்தால் தருகிறேன். பயப்படாதே. அதை நான் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்த மாட்டேன்.
அந்த முட்டாள்களின் தொடர் முயற்சிகள் தோற்றுப் போன பரிதாபக் கதையை அவர்களே சொல்வார்கள்